லண்டனில் பொதுமக்களை கத்தியால் குத்திய நபர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்

வெள்ளிக்கிழமை கத்தியினால் பொதுமக்களை தாக்கிய நபரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அதில் இறந்த நபரான உஸ்மான் கான் என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது.

லண்டனில் பொதுமக்களை கத்தியால் குத்திய நபர் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்

பயங்கரவாத குற்றங்களுக்காக 2012இல் தண்டனை பெற்றவர்

London:

பிரிட்டனில் லண்டன் பாலம் அருகே பொதுமக்களை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். கத்திக் குத்தில் ஈடுபட்ட நபர் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர் என்று காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டவர் என்றும் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை கத்தியினால் பொதுமக்களை தாக்கிய நபரை காவல்துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர். அதில் இறந்த நபரான உஸ்மான் கான் என்று காவல்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்த நபர் பயங்கரவாத குற்றங்களுக்காக 2012இல் தண்டனை பெற்றவர் என்றும் 2018 டிசம்பரில் வெளியாகியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு லண்டன் பாலம் மீது மூன்று பேர் நடத்திய தாக்குதலின்போது காயமடைந்துள்ளனர். 

உஸ்மான் கான் மத்திய இங்கிலாந்தின் ஸ்டாஃபோர்ட்ஷையர் பகுதியில் வசித்து வருவதாகவும் அந்த பகுதியில் அதிகாரிகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாவும் நீல் பாஸு தெரிவித்துள்ளார்

More News