ராகுலை விமர்சிக்க முயன்று அவமானப்பட்ட பாஜக மத்திய அமைச்சர்!! #Video

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இங்கு மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

ராகுலை விமர்சிக்க முயன்று அவமானப்பட்ட பாஜக மத்திய அமைச்சர்!! #Video

அமேதி தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி போட்டியிடுகிறார்.

ஹைலைட்ஸ்

  • 6-வது கட்டமாக மத்திய பிரதேசத்தில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
  • அமேதி தொகுதியில் ராகுலை எதிர்த்து போட்டியிடுகிறார் ஸ்மிருதி
  • 2014 மக்களவை தேர்தலில் ராகுலிடம் தோல்வியடைந்தார் ஸ்மிருதி
Bhopal:

மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட பாஜக அமைச்சர் ஸ்மிருதி இரானி (Smriti Irani), 'ராகுல் காந்தி வாக்குறுதி அளித்தபடி கடன்களை மாநில காங்கிரஸ் அரசு தள்ளுபடி செய்து விட்டதா' என்று கேட்டுள்ளார். இதற்கு ஆமாம் ஆமாம் என அங்கிருந்த மக்கள் கத்தில் அமைச்சரை மூக்குடைத்தனர். 

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோ ட்விட்டரில் ஷேர் செய்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சி, பாஜகவினரின் பொய்களை மக்கள் உணரத் தொடங்கி விட்டனர் என்று கூறியுள்ளது. 
 

இந்த வீடியோவின் நம்பகத் தன்மையை என்.டி.டி.வி. உறுதி செய்யவில்லை

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அமேதி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பாஜக தரப்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி (Smriti Irani) களம் இறக்கப்பட்டுள்ளார். ராகுல் விமர்சிக்க முயன்ற நிலையில், இரானிக்கு அவமானம் நேர்ந்திருக்கிறது. 

Newsbeep

2014 மக்களவை தேர்தலிலும் ராகுலை எதிர்த்து ஸமிருதி களத்தில் நின்றார். ஆனால் ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவினார். 

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மத்திய பிரதேசம்,ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வெற்றி பெற்றது. இந்த தேர்தலின்போது விவசாயிகளின் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பதுதான் காங்கிரஸ் அளித்த முக்கிய வாக்குறுதியாகும்.