‘’நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை’’ : பிரதமர் மோடி

ஊழலுக்கு என்றால் அதற்கு காங்கிரஸ் என்று பொருள் என்று பிரதமர் மோடி விமர்சித்திருக்கிறார். மக்களவை தேர்தலையொட்டி அவர் வடகிழக்கு மாநிலங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘’நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை’’ : பிரதமர் மோடி

அருணாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி இன்று பிரசாரம் மேற்கொண்டார்.


Aalo: 

நாட்டின் வளர்ச்சியில் எதிர்க்கட்சிகளுக்கு விருப்பம் இல்லை என்று பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மக்களவை தேர்தலையொட்டி அருணாசல பிரதேசம், அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பிரதமர் மோடி பிரசாரம் செய்து வருகிறார். அருணாசல பிரதசத்தில் ஆலோவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மோடி பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது-

நாடு எப்போதெல்ாம் சாதனை படைக்குமோ அப்போதெல்லாம் எதிர்க்கட்சிகள் மகிழ்ச்சி கொள்வதில்லை. எதிர்க்கட்சியின் முரண்பாடாக சமூக வலைதளங்களில் பதிவுகளை இடுகின்றனர். அவர்களுக்கு நாட்டின் வளர்ச்சியில் விருப்பம் இல்லை.

தீவிரவாதிகளின் முகாம்களை இந்தியா தாக்கி அழிக்கும்போது எதிர்க்கட்சிகளின் நிலைப்பாட்டை கவனித்தீர்களா? நம்முடைய விஞ்ஞானிகள் சாதனை படைக்கும்போது, எதிர்க்கட்சிகள் குறைகளை மட்டுமே காண்கின்றனர்.

இத்தகைய எதிர்க்கட்சியினருக்கு வாக்காளர்கள் வரும் மக்களவை தேர்தலில் தண்டன கொடுக்க வேண்டும். வடகிழக்கு மாநிலங்களை பொறுத்தவரையில் அருணாசல பிரதேசத்தில்தான் தாமரை முதலில் மலர்ந்தது. அதற்கு இம்மாநில மக்கள்தான் முக்கிய காரணம்.

அருணாசல பிரதேசத்தில் மத்திய அரசால் வளர்ச்சியை கொண்டு வரமுடியும். கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இந்த காவல்காரன் உங்களுக்கு ரயில்பாதையை அமைத்துக் கொடுத்தான்.

இவ்வாறு மோடி பேசினார். அருணாசல பிரதேசத்தில் மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 11-ம்தேதி நடைபெறுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................