351 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறது பாஜக!! மீண்டும் பிரதமராகிறார் மோடி!

கருத்துக் கணிப்பு முடிவுகளை உண்மையாக்கி பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 351 இடங்களை கைப்பற்றி உள்ளன. இவற்றில் 302 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.

351 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறது பாஜக!! மீண்டும் பிரதமராகிறார் மோடி!

காங்கிரஸ் கூட்டணிக்கு 92 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளது.

கருத்துக்கணிப்பில் கூறப்பட்டபடியே பாஜக கூட்டணி நாடு முழுவதும் 351 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியமைக்க உள்ளது. இதில் பாஜக மட்டுமே 302 இடங்களில் வெற்றி பெற்றிருக்கிறது. 

காங்கிரஸ் கூட்டணிக்கு மொத்தம் 52 இடங்கள் கிடைத்திருக்கின்றன. இவற்றில் 54 இடங்களில் காங்கிரஸ் தனித்து வெற்றி கண்டிருக்கிறது. மத்தியில் ஆட்சியமைப்பதற்கு 272 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில் பாஜக தனித்தே ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை பெற்றிருக்கிறது. 

குறிப்பாக அரியானா, டெல்லி, உத்தரகாண்ட், குஜராத், இமாசல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக அனைத்து இடங்களையும் கைப்பற்றி அசுர பலம் கொண்டதாக உருவெடுத்துள்ளது. காங்கிரசைப் பொறுத்தளவில் அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி அமேதி தொகுதியில் பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இரானியிடம் தோல்வி அடைந்தார். கேரள மாநிலம் வயநாடு மக்களவை தொகுதியை தேர்வு செய்து போட்டியிட்டிருந்த ராகுல் காந்தி அங்கு சுமார் 8 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார். 

தமிழ்நாட்டை பொறுத்தளவில் திமுக கூட்டணி 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுக ஒரேயொரு தொகுதியில் வென்றுள்ளது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 9 தொகுதிகளில் 8 தொகுதிகளை கைப்பற்றி உள்ளது. நாளை மறுதினம் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியமைக்க உரிமை கோருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.