This Article is From Mar 25, 2019

''பாஜகவின் கூட்டணி கட்சியாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது'' : மு.க.ஸ்டாலின்

தேர்தல் ஆணையத்திற்கு எதிராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ளார்.

''பாஜகவின் கூட்டணி கட்சியாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது'' : மு.க.ஸ்டாலின்

எதிர்க்கட்சிகளின் உரிமைகள் மறுக்கப்படுவதாக ஸ்டாலின் கூறியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தளவில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் இன்னொரு கட்சியாக தேர்தல் ஆணையம் செயல்படுகிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது- 
தமிழகத்தை பொறுத்தவரை பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இன்னொரு கட்சிபோல் தேர்தல் ஆணையம் செயல்படுவது பேரதிர்ச்சியளிக்கிறது. 

ஜனநாயகத்தின் முகத்தில் தேர்தல் ஆணையமே கரி பூசுவதா?

திருப்பரங்குன்றம் கைரேகை விவகாரத்தில் தீர்ப்புக்கு பிறகும் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?

எதிர்க்கட்சியின் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு அவர்கள் ஏற்கனவே பயன்படுத்திய சின்னங்கள் மறுக்கப்படுகின்றன. 

ஆனால், பாஜக - அதிமுக கூட்டணியின் கட்சிகளுக்கு அங்கீகாரத்தை இழந்திருந்தாலும் அவர்கள் கேட்பதற்கு முன்னரே பழைய சின்னமே ஒதுக்கப்படுவது ஜனநாயகப் படுகொலை! 

இவ்வாறு கூறியுள்ளார். 

முன்னதாக மக்களவை தேர்தல் தர்மத்திற்கும், அதர்மத்திற்கும் நடப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்துள்ள ஸ்டாலின், முதலில் தர்மத்தைப் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது?தர்ம யுத்தத்தின் விலையை துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ்-யிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். 

அ.தி.மு.க என்ற ஊழல் அரசை அகற்ற மக்கள் தயாராகி விட்டார்கள்! என்று பதிலடி கொடுத்துள்ளார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.