'காங்கிரஸ் கட்சி இருக்கும் வரையில் வறுமையை ஒழிக்கவே முடியாது' : பிரதமர் மோடி!!

காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை விமர்சித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
'காங்கிரஸ் கட்சி இருக்கும் வரையில் வறுமையை ஒழிக்கவே முடியாது' : பிரதமர் மோடி!!

ஒடிசா மாநிலம் சோன்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.


Sonepur: 

ஏழ்மையை அரசியல் ஆயுதமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்துகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ள வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மாதம் ரூ. 6 ஆயிரம் வழங்கும் திட்டத்தை விமர்சித்து பிரதமர் மோடி பேசியுள்ளார். 

மக்களவை தேர்தலை முன்னிட்டு பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி ஒடிசாவில் பிரசாரம் மேற்கொண்டார். சோன்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது-

ஏழ்மையை அரசியல் ஆயுதமாக காங்கிரஸ் கட்சி பயன்படுத்தி வருகிறது. காங்கிரஸ் இருக்கும் வரையில் வறுமையை ஒழிக்கவே முடியாது. காங்கிரசை நீக்கினால் வறுமை ஒழிந்து விடும். 

ஒவ்வொரு தலைமுறையிலும், வறுமையை ஒழிப்போம் என காங்கிரஸ் கட்சி முழக்கங்களை எழுப்பி வருகிறது. ஆனால் ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏழைகள் ஏழைகளாகவே இருக்கின்றனர். அவர்களது தலைவர்கள் பணக்காரர்களாக மாறிக் கொண்டேயுள்ளனர். 

இவ்வாறு மோடி பேசினார். ஒடிசாவில் மக்களவை தேர்தலும், சட்டமன்ற தேர்தலும் 4 கட்டங்களாக ஏப்ரல் 11-ம்தேதி தொடங்குகின்றன. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................