''வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை'' : திருமா விமர்சனம்

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன் பரப்பியில் மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

''வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமை தேர்தல் ஆணையத்திற்கு இல்லை'' : திருமா விமர்சனம்

பொன்பரப்பி வன்முறை காரணமாக 250-க்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

வாக்காளர்களின் உரிமையை பாதுகாக்கும் வலிமையற்ற அமைப்பாக தேர்தல் ஆணையம் உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். 

சிதம்பரம் மக்களவை தொகுதிக்குட்பட்ட பொன் பரப்பியில் வாக்குப்பதிவு நடந்த ஏப்ரல் 18-ம்தேதியன்று வன்முறை ஏற்பட்டது. இதில் 20-க்கும் அதிகமான வீடுகள் சேதம் அடைந்தன. இதுதொடர்பாக 25-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

வன்முறை காரணமாக பொன்பரப்பியில் சுமார் 250-க்கும் அதிகமானோர் வாக்களிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அங்கு மறு வாக்குப்பதிவு நடத்தப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், மனுதாரரின் கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்தனர். 

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது-

அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய தொடர் பிரசாரம் செய்கிறது. ஒரு கிராமத்தில் மட்டும் 250 பேர் வாக்களிக்கப்படாமல் தடுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தாங்கள் வாக்களிக்க வேண்டும் என்று ஒரு மாதகாலமாக தேர்தல் ஆணையத்திடம் கெஞ்சிய நிலையில், அவர்கள் வாக்களிக்க தேவையான ஏற்பாட்டை செய்ய முடியாத நிலையில் தேர்தல் ஆணையம் உள்ளது. 

வாக்காளர்கள் உரிமையை பாதுகாக்கும் வலிமையும், தகுதியும் அற்றதாக தேர்தல் ஆணையம் உள்ளது. ஆளும் கட்சியினருக்கு சேவையு செய்யும் எடுபிடிகளாக மட்டும்தான் தேர்தல் ஆணையம் உள்ளதென தெரியவருகிறது. 

இவ்வாறு திருமாவளவன் கூறினார். 

More News