This Article is From Mar 22, 2019

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நாளை வெளியாகிறது!!

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. காங்கிரசை தவிர்த்து மற்ற கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டன.

தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை நாளை வெளியாகிறது!!

டெல்லியில் நாளை காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களைவ தேர்தலை பொறுத்தவரையில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. அக்கட்சிக்கு மொத்தம் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, மார்க்சிஸ்ட் கம்யூ., இந்திய கம்யூ., உள்ளிட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டன. காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் மட்டும் அறிவிக்கப்படாமல் உள்ளது. 

தமிழகத்தை பொறுத்தளவில் திருவள்ளூர் , சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி ஆகிய 9 தொகுதிகளை திமுக காங்கிரசுக்கு ஒதுக்கியுள்ளது. புதுவை தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. 

இந்த நிலையில், தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் நாளைதான் அறிவிக்கப்படும் என்று காங்கிரசின் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் இந்த முறை காங்கிரஸ் கட்சி கணிமான இடங்களில் வெற்றிபெறும் என்று கூறப்படுகிறது. இதனால் சீட்டுகளை பெறுவதில் நிர்வாகிகள் இடையே போட்டி காணப்படுகிறது. இதன் காரணமாக நாளை வெளியாகவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)
.