திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள இந்திய ஜனநாயக கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவித்துள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
திமுக கூட்டணியில் பாரிவேந்தர் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு

ஒப்பந்தத்தில் ஸ்டாலினும் - ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டுள்ளனர்.


ஹைலைட்ஸ்

  1. திமுக - இந்திய ஜனநாயக கட்சி இடையே தொகுதி உடன்பாடு
  2. ஒரு தொகுதியில் இந்திய ஜனநாயக கட்சி போட்டியிடுகிறது
  3. திமுக சின்னத்தில் பாரிவேந்தர் கட்சி போட்டி

திமுக கூட்டணியில் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  அக்கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மக்களவை தேர்தலை முன்னிட்டு தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் தீவிரம் அடைந்துள்ளன. அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, புதிய தமிழகம் கட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாமகவுக்கு 7 மக்களவை தொகுதிகளும் ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் ஒதுக்கப்பட்டுள்ளது. 

பாஜகவுக்கு 5 மக்களவை தொகுதிகளும், புதிய தமிழகம்  கட்சிக்கு ஒரு தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகளுடன் அதிமுக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தேமுதிக உடனான பேச்சுவார்த்தை இழுபறியில் இருக்கிறது. விஜயகாந்த் எத்தனை தொகுதிகள் கேட்டார், அதிமுக தரப்பில் எத்தனை தொகுதிகளுக்கு ஓகே சொல்லப்பட்டிருக்கிறது என்பதில் மாறுபட்ட கருத்துகள் வெளியாகி வருகின்றன. 

இதற்கிடையே திமுகவுடன் பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. இந்த நிலையில், இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. எந்த தொகுதியில் பாரிவேந்தரின் கட்சி போட்டியிடும் என்பது உறுதி செய்யப்படவில்லை. 

தொகுதி ஒதுக்கீட்டு உடன்படிக்கையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் ரவி பச்சமுத்துவும் கையெழுத்திட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியை விருப்ப தொகுதியாக பாரிவேந்தர் கட்சி கேட்டுள்ளது. 

முன்னதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்திருந்தது. தற்போது, இந்திய ஜனநாயக கட்சியும் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவத்திருக்கிறது. சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................