This Article is From Mar 18, 2019

மக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - முழுவிவரம்

மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

மக்களவைத் தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு! - முழுவிவரம்

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்த தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமகவுக்கு 7 நாடாளுமன்ற தொகுதிகளும், பாஜகவுக்கு 5 தொகுதிகளும், தேமுதிகவுக்கு 4 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதேபோல், புதிய தமிழகம் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

அதிமுக கூட்டணியில் தொகுதிகள் ஒதுக்குவது குறித்த பேச்சுவார்த்தை, அனைத்து கட்சிகளுடனும் சுமூகமாக முடிவுற்ற நிலையில், எந்தெந்த கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் என்பதை அதிமுக தலைமை அதிகாரப்பூர்வமாக நேற்று காலை அறிவித்தது. அதைத்தொடர்ந்து நேற்று இரவு அதிமுக மக்களவேத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, அதிமுக வேட்பாளர்களின் விவரம்:

1. திருவள்ளூர்(தனி) - வேணுகோபால்

2. சென்னை தெற்கு - ஜெயவர்தன்

3. காஞ்சிபுரம் (தனி) - மரகதம் குமரவேல்

4. கிருஷ்ணகிரி - முனுசாமி

5. திருவண்ணாமலை - அக்ரி கிருஷ்ணமூர்த்தி

6. ஆரணி - செஞ்சி வெ.ஏழுமலை

7. சேலம் - சரவணன்

8. நாமக்கல் - காளியப்பன்

9. ஈரோடு - வெங்கு (எ) மணிமாறன்

10. திருப்பூர் - ஆனந்தன்

11. நீலகிரி (தனி) - தியாகராஜன்

12. பொள்ளாச்சி - மகேந்திரன்

13. கரூர் - தம்பிதுரை

14. பெரம்பலூர் - சிவபதி

15. சிதம்பரம் (தனி) - சந்திரசேகர்

16. மயிலாடுதுறை - ஆசைமணி

17. நாகப்பட்டினம் (தனி) - தாழை.ம.சரவணன்

18. மதுரை- ராஜ்சத்யன்

19. தேனி- ரவீந்ரநாத் குமார்

20. திருநெல்வேலி- மனோஜ் பாண்டியன்

இதேபோல், பதினெட்டு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடுபவர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம்,

1. பூந்தமல்லி- ஜி.வைத்தியநாதன்

2. பெரம்பூர்- ஆர்.எஸ்.ராஜேஷ்

3. திருப்போரூர்- திருக்கழுக்குன்றம். எஸ்.ஆறுமுகம்

4. சோளிங்கர்- ஜி.சம்பத்

5. குடியாத்தம்- (தனி) கஸ்பா.ஆர். மூர்த்தி

6. ஆம்பூர்- ஜெ.ஜோதி ராமலிங்க ராஜா

7. ஓசூர்- ஜோதி பாலகிருஷ்ண ரெட்டி

8. பாப்பிரெட்டிப்பட்டி- எ.கோவிந்தசாமி

9. அரூர் (தனி)- வீ.சம்பத்குமார்

10. நிலக்கோட்டை( தனி)- எஸ்.தேன்மொழி

11. திருவாரூர்- ஆர்.ஜீவானந்தம்

12. தஞ்சாவூர்- ஆர்.காந்தி

13. மானாமதுரை- (தனி) எஸ்.நாகராஜன்

14. ஆண்டிப்பட்டி- எ.லோகி ராஜன்

15. பெரியகுளம்- எம்.முருகன்

16. சாத்தூர்- எம்.எஸ்.ஆர் ராஜவர்மன்

17. பரமக்குடி- (தனி) என்.சதன் பிரபாகர்

18. விளாத்திகுளம்- பி.சின்னப்பன்

 

மேலும் படிக்கமக்களவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர்கள் விவரம்!

.