This Article is From Jan 19, 2019

போர் வரப் போகிறது... எச்சரிக்கும் ஸ்டாலின்!

பிரதமர் நரேந்திர மோடி சிலரை பார்த்து பயப்படுவார். அதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர் ஆகும், மம்தாவை பார்த்து மோடி அஞ்சுகிறார் என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

போர் வரப் போகிறது... எச்சரிக்கும் ஸ்டாலின்!

MK Stalin: மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக செயல்படுகிறது என மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டினார்.

Kolkata:

பாஜகவின் "இந்துத்துவ தீவிரவாதத்திற்கு" எதிராக போராடும் வகையில், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது இந்திய மக்களுக்கு இரண்டாவது சுதந்திர போராட்டம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் மம்தா பானர்ஜி தலைமையில் பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணையும் ஐக்கிய இந்தியா பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, மு.க.ஸ்டாலின், அகிலேஷ் யாதவ், அரவிந்த் கெஜ்ரிவால், சந்திரபாபு நாயுடு, சரத்பவார் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

கொல்கத்தாவில் உள்ள பிரிகேட் பரேட் மைதானத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி சிலரை பார்த்து பயப்படுவார். அதில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் ஒருவர் ஆகும், மம்தாவை பார்த்து மோடி அஞ்சுகிறார்.

நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் என்பது இரண்டாவது சுதந்திர போராட்டம் ஆகும். பரவி வரும் இந்துத்துவ தீவிரவாதத்தை நாம் ஒன்றிணைந்து தடுத்து நிறுத்துவோம். மோடியை தோற்கடித்து வீட்டிற்கு அனுப்புவோம், நாட்டை காப்பாற்றுவோம் என்றார்.

மேலும், மத்திய அரசை கார்ப்பரேட் நிறுவனமாக்கியவர் மோடி, அவர் மீண்டும் பதவிக்கு வந்தால், நாடு 50 வருடங்கள் பின்நோக்கி சென்றுவிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

.