This Article is From Apr 29, 2019

மேற்குவங்கத்தில் பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடும் மோதல்!

Lok Sabha elections 2019: மேற்குவங்கத்தில் வாக்குச்சாவடிக்கு அருகே பாஜக வேட்பாளர் பாபுல் சுப்ரியோவின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

பாபுல் சுப்ரியோ மம்தா பானர்ஜி ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளார் என பாபுல் கூறனார்.

ஹைலைட்ஸ்

  • ஆசன்சோல் பகுதியில் பாஜக - திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களிடையே மோதல்
  • பாபுல் சுப்ரியோ வாக்குச்சாவடிகளில் வன்முறை நிகழ்வதாக தனது டிவிட்டரில் தகவ
  • ஆசன்சோல் பாபுல் சுப்ரியோ மூன் மூன் சென்-ஐ எதிர்கொள்கிறார்.
Asansol:

மக்களவைத் தேர்தலுக்கான நான்காம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வரும்நிலையில், மேற்கு வங்க மாநிலத்தில் வாக்குப் பதிவின் போது திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக வேட்பாளர் கார் உடைக்கப்பட்டது.

இதுகுறித்து வெளியான வீடியோக்களில், பாஜக வேட்பாளர் காரில் அமர்ந்திருக்கிறார். அவரது காருக்கு பின் பக்கம் கண்ணாடி அடித்து நொறுக்கப்படுகிறது. இதையடுத்து, அவர் பிரச்சனை ஏற்படும் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தான் மத்திய பாதுகாப்பு படையுடன் செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மக்களும் தாங்கள் சுந்திரமாக வாக்களிக்க பாதுபாப்புக்கு மத்திய பாதுகாப்பு படை வேண்டும் என வலியுறுத்துகின்றனர் என்றார்.

இதுகுறித்து தனது டிவிட்டர் பதிவில், பூத் எண்ணுடன் பதிவிட்ட அவர், அந்த வாக்குச்சாவடிகள் திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்களால் கைப்பற்றப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், இந்த வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுவதில்லை. ஜனநாயக நாட்டில் இவ்வாறு நடைபெறுவது வெட்கக்கேடானது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

மக்களவை தேர்தலுக்கான 4ஆம் கட்டத் தேர்தல் 9 மாநிலங்களில் உள்ள 71 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. இதற்கான வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடம் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

இந்நிலையில் மேற்கு வங்கத்தில் ஆசன்சோல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடி எண் 125-ல் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர் அவர்களை தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

.