இந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!

ராபர்ட் வத்ரா, தனது கையில் மூவர்ணக் கொடியுடன் இருப்பது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் பதிவு செய்த அவர், முந்தைய பதவில் பராகுவே நாட்டு கொடியை தவறுதலாக பதிவிட்டதாவும் குறிப்பிட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
இந்திய கொடியை தவறாக பதிவிட்ட ராபர்ட் வத்ரா: நெட்டிசன்கள் கிண்டல்!

டெல்லியில் 6வது கட்டமாக நேற்று நடந்த தேர்தலில் வத்ரா வாக்கு பதிவு செய்துள்ளார்.


New Delhi: 

ஹைலைட்ஸ்

  1. ராபர்ட் வத்ரா வாக்குப்பதிவு செய்த பின் புகைப்படத்தை வெளியிட்டார்.
  2. அதில் தவறுதலாக, பராகுவே நாட்டு கொடியை அவர் பதிவு செய்தார்.
  3. பின்னர் தவறுதலாக பதிவிட்டதாக அவர் பதிவு வெளியிட்டார்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் மைத்துனரான ராபர்ட் வதேரா, 6வது கட்டமாக நேற்று டெல்லியில் நடந்த வாக்குப்பதிவில் வாக்களித்துவிட்டு, மையுடன் கூடிய தனது விரலை காட்டியபடி ட்விட்டரில் புகைப்படத்துடன் ஒரு பதிவை வெளியிட்டிருந்தார். அந்த பதிவில், மூவர்ணக்கொடியையும் எமோஜியாக பதிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த மூவர்ணமானது, சிவப்பு, ஊதா மற்றும் வெள்ளை நிறத்தில் பராகுவே நாட்டின் கொடியாக இருந்தது.

இதைத்தொடர்ந்து, மே.12ல் ராபர்ட் வதேரா தன்னை பராகுவே நாட்டு குடிமகனாக அறிவித்துக்கொண்டார் என நெட்டிசன்கள் விமர்சித்தனர். லண்டனில் சொத்துகள் வாங்கிய விவகாரத்தில் வதேரா மீது வழக்குகள் உள்ள நிலையில், அவர் தென்அமெரிக்காவில் வேறு எங்காவது செல்ல நினைக்கிறார் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதன்பின், ராபர்ட் வதேரா தனது முதல் பதிவை நீக்கிவிட்டு, 2வது பதிவை வெளியிட்டார். எனினும், பழைய பதிவின் ஸ்கிரின்ஷாட்கள் சமூகவலைதளங்களில் பரவி வந்தன. இதேபோல், பராகுவே கொடியும் இணையத்தில் டிரெண்டிங் ஆனது. நெட்டிசன்களும் அவரை கடுமையாக விமர்சித்தனர்.

94isd21o

இதைத்தொடர்ந்து, தனது 2வது பதிவில், தான் தேசிய கொடியை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட அவர், இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்தார். அதில், இந்தியா என் இதயத்தில் இருக்கிறது. எனது பதிவில் பராகுவே நாட்டு கொடியை பயன்படுத்தியது கவனக்குறைவால் நடந்த தவறு.

இது உங்கள் அனைவருக்கும் புரியும் என்பதும் எனக்கு தெரியும். ஆனாலும் இதை நீங்கள் இதை சர்சைசையாக்க முடிவு எடுத்துவிட்டீர்கள். இதனை நான் பொருட்படுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.   

(With inputs from Agencies)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................