ராகுல் காந்தியே ஆட்சியை பிடிப்பார் - மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!

ராகுல் வெற்றிப் பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.

ராகுல் காந்தியே ஆட்சியை பிடிப்பார் - மு.க. ஸ்டாலின் அதிரடி பேச்சு!!

ஹைலைட்ஸ்

  • ராகுல் காந்தி ஆட்சியை பிடிப்பார் என்று உறுதி தெரிவித்தார் மு.க.ஸ்டாலின்.
  • தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடிக்கும் என்றும் தெரிவித்தார்.
  • மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை சிறப்பாக நடந்து வருகிறது.
Chennai:

மக்களவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சில மணி துளிகளில் தொடங்க இருக்கும் நிலையில், ராகுல் காந்தியே மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என்று அதிரடியாக பேசியிருக்கிறார் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்.  தமிழகத்தில் மொத்தம் 38 தொகுதிகளில் திமுக-காங்கரஸ் மற்றும் அதிமுக-பாஜக் கூட்டணி அமைத்திருந்தது.  தேர்தலின் போது வேலூரில் இருந்து ஆயிரக்கணக்கில் பணம் பரிமுதல் செய்யப்பட்டதால் அங்கு தேர்தல் ரத்து செய்யப்பட்டது.  

திமுக கூட்டணிக்கு 97 உறுப்பினர்கள் உள்ளனர்.  ஆட்சியை பிடிக்க மொத்தம் 117 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.  அதிமுக தரப்பின் 114 உறுப்பினர்கள் உள்ளனர். ராகுல் வெற்றிப் பெற்றால் தமிழகத்தில் திமுக ஆட்சி அமைப்பது உறுதி என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்தது குறித்து, திமுகவின் மகளின் அணி செயலாளர் கனிமொழியிடம் இது குறித்து கேட்டபோது, தேர்தல் முடிவு வரும்வரை காத்திருங்கள்.  அப்போது யார் வெற்றி பெறுவார்கள் என்பது தெரியவரும் என்றார்.