This Article is From May 23, 2019

தனிப் பெரும்பான்மை நோக்கி பாஜக: 10 ஃபேக்ட்ஸ்!

குஜராத், டெல்லி, பிகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.

தனிப் பெரும்பான்மை நோக்கி பாஜக: 10 ஃபேக்ட்ஸ்!

உத்தர பிரதேசத்தில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணியை விட ஒரு சில இடங்களில் பாஜ முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

New Delhi:

7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக, மீண்டும் ஆட்சி அரியணையில் ஏற தீவிர பிரசாரம் செய்தது. ராகுல் காந்தி தலைமையால் ஊக்கமடைந்த காங்கிரஸ் கட்சி மற்றும் 21 எதிர்க்கட்சிகள், பாஜகவுக்கு எதிராக அணி திரண்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், பாஜக மீண்டும் ஆட்சியில் அமரும் என்று கணித்தன. 

இது தொடர்பான 10 முக்கிய தகவல்கள்:

1.அஞ்சல் மூலம் செலுத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கை முடிவடைந்ததைத் தொடர்ந்து, பாஜக, பெரும்பான்மை இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 2014 ஆம் ஆண்டு தேர்தலைவிட பாஜக-வின் வெற்றி விகிதம் குறைந்திருந்தாலும், தனிப் பெரும் கட்சியாக முன்னிலை வகிக்கிறது. 

2.குஜராத், டெல்லி, பிகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக முன்னிலையில் இருக்கிறது.

3.தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கர்நாடகாவில் பாஜ முன்னிலை வகிக்கிறது. காங்கிஸ்- மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக் கூட்டணி ஆட்சிக்கு ஒந்து ஒரு வருடத்தில் பின்னடைவை சந்தித்துள்ளது. 

4.பஞ்சாப் மற்றும் தமிழகத்தில் காங்கிரஸ் முன்னிலை வகிக்கிறது. சத்தீஸ்கரில் பாஜக-வுடன் காங்கிரஸ் மல்லுக்கட்டி வருகிறது. 

5.உத்தர பிரதேசத்தில் அகிலேஷ்- மாயாவதி கூட்டணியை விட ஒரு சில இடங்களில் பாஜ முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் 4 இடங்களில் முன்னிலையில் உள்ளது. 

6.ஆந்திராவில், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம் கட்சியைவிட அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது. 

7.மேற்கு வங்கத்தில் திரிணாமூல் மற்றும் பாஜக போட்டா போட்டி போட்டுவருகின்றனர். இந்த முறை வங்கத்தில் பாஜக, அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று கணிக்கப்படுகிறது. 

8.தமிழகத்தில் திமுக கூட்டணி, நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணியை விட முன்னிலையில் உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. 

9.கடந்த 5 ஆண்டுகளாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நல்ல நிர்வாகத்துக்கும், உறுதியான வெளிநாட்டுக் கொள்கைக்கும், வீரியமான பிரசாரங்களுக்கும் பெயர் பெற்றது. ஆனால் பொருளாதாரம் நலிவுற்றது, போதுமான வேலை வாய்ப்பு உருவாக்கதது, விவசாயத் துறை பின்னடைவு, வலதுசாரி அமைப்புகளின் வன்முறை உள்ளிட்டவைகள் குறித்து பாஜக மீது கடும் விமர்சனம் வைக்கப்பட்டது. தேசியவாதம் மற்றும் தேசப் பாதுகாப்பை முன்வைத்து பாஜக, தேர்தலை சந்தித்தது. 

10.விவிபேட் இயந்திரத்தை, வாக்கு எண்ணிக்கைத் தொடங்கும் முன்னர் ஒப்பிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தேர்தல் ஆணையம் ஏற்க மறுத்துவிட்டது. உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் 5 விவிபேட் இயந்திரங்களில், வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர் ஒப்பீடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

.