This Article is From Mar 19, 2019

''காவல்காரன் திருடனாக மாறினால் நாடு முன்னேறுமா?'' : மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

ட்விட்டர் முழுவதும் 'காவல்காரன்' என பொருள்படும் 'சோக்கிதார்' பிரசாரத்தை பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர்.

''காவல்காரன் திருடனாக மாறினால் நாடு முன்னேறுமா?'' : மோடியை கடுமையாக விமர்சித்த ராகுல்

காவல்காரன் யார் என்பது ரபேல் ஒப்பந்தத்தில் வெளிப்பட்டு விட்டதாக ராகுல் கூறியுள்ளார்.

Itanagar:

காவல்காரன் திருடனாக மாறினால் நாடு முன்னேறுமா? என்று பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்து ராகுல் காந்தி பேசியுள்ளார். அனைத்தையும் மோடி பறித்துக் கொண்டிருக்கும்போது பாஜக தலைவர்கள் தங்களை காவல்காரன் என்று ஏன் அழைத்துக் கொள்கிறார்கள் என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். 

ட்விட்டர் முழுவதும் 'காவல்காரன்' என பொருள்படும் 'சோக்கிதார்' பிரசாரத்தை பாஜக தலைவர்கள் செய்து வருகின்றனர். அவர்கள் தங்களது பெயருக்கு முன்னால் சோக்கிதார் என்பதை சேர்த்துக் கொண்டுள்ளனர். 

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் தமிழிசையும் தனது ட்விட்டர் அக்கவுன்ட்டில் பெயருக்கு முன்னால் சோக்கிதார் என்பதை சேர்த்துள்ளார். பாஜக தலைவர் அமித் ஷா, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரும் தங்களது பெயருக்கு முன்னால் சோக்கிதார் என்பதை சேர்த்துள்ளனர். 

கடந்த சனிக்கிழமையன்று இந்த சோக்கிதார் பிரசாரம் ஆரம்பிக்கப்பட்டது. அன்றைய தினத்தில் இருந்து அடுத்த 2 நாட்களுக்கு #MainBhiChowkidar என்ற பெயரில் ட்விட்டுகளை பாஜகவினர் பதிவிட்டனர். 

இதன்படி, #MainBhiChowkidar  என்ற ட்விட் மட்டுமே சுமார் 20 லட்சங்களை தாண்டி 2 நாட்களாக உலக அளவில் இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருந்தது. 

இந்த நிலையில் அருணாசல பிரதேசத்தில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ராகுல் காந்தி சோக்கிதார் பிரசாரம் குறித்து பேசியதாவது-

நீங்கள் (மோடி) எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு உங்கள் கட்சி தலைவர்களை எல்லாம் ஏன் காவல் காரர்களாக மாற்றுகிறீர்கள்?. ரபேல் ஒப்பந்தத்தில் சோக்கிதாரின் உண்மை முகம் வெளிப்பட்டு விட்டது. காவல்காரன் (மோடி) திருடனாக மாறும்போது நாடு எப்படி முன்னேற்றம் அடையும்?. 
இவ்வாறு ராகுல் காந்தி பேசினார். 
 

.