This Article is From Mar 28, 2019

2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு ரெடியா? அதிரடி காட்டும் பிரியங்கா காந்தி!!

உத்தர பிரதேச்தின் கிழக்கு பகுதியின் பொதுச் செயலாளர் பொறுப்பு பிரியங்கா காந்திக்கு வழங்கப்பட்டுள்ளது. அவரின் கட்டுப்பாட்டில் 40 மக்களவை தொகுதிகள் வருகின்றன.

2022 உத்தர பிரதேச சட்டசபை தேர்தலுக்கு ரெடியா? அதிரடி காட்டும் பிரியங்கா காந்தி!!

பிரியங்காவின் பிரசாரத்தால் உ.பி. அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Lucknow:

உத்தர பிரதேசத்தில் 2022-ல் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு ரெடியா என்று அம்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்களை கேட்டு வருகிறார். இது சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. 

உத்தர பிரதேசத்திற்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. இங்குள்ள அமேதி மக்களவை தொகுதியில் ராகுல் காந்தியும், ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியும் போட்டியிடுகின்றனர். 

நாட்டில் ஆளும் கட்சியை தீர்மானிப்பதில் உத்தர பிரதேசம் முக்கிய பங்கை வகிக்கிறது. இங்குள்ள 80 மக்களவை தொகுதிகளில் அதிக இடங்களை கைப்பற்றும் கட்சி கிங் மேக்கராக மாறும் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.

இந்த நிலையில் தாயார் சோனியா காந்தி மற்றும் சகோதரர் ராகுல் காந்திக்கு ஆதரவாக இதுவரையில் பிரசாரம் செய்து வந்த பிரியங்கா காந்தி, கடந்த மாதம் நேரடி அரசியலில் இறக்கப்பட்டார். அவருக்கு உத்தர பிரதேசத்தின் கிழக்கு பகுதிக்கு பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவரது கட்டுப்பாட்டில் 40 மக்களவை தொகுதிகள் உள்ளன. 

உத்தர பிரதேச அரசியலில் எதிர்த் துருவங்களாக இருக்கும் சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் கூட்டணி அமைத்து, காங்கிரசை புறந்தள்ளியுள்ளன. இதற்கிடையே, 2022-ல் நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி தயாராகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், மக்களவை தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரியங்கா காந்தி, கட்சி தொண்டர்களை சட்டசபை தேர்தலுக்கு தயார்படுத்தி வருகிறார். இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அவர், இந்த பிரசாரம் மக்களவை தேர்தலுக்கு மட்டுமல்ல, 2022 சட்டசபை தேர்தலுக்கும் சேர்த்துதான் என்று பதில் அளித்துள்ளார். 

உத்தர பிரதேச அரசியலில் சுமார் 30 ஆண்டுகளாக உச்சத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியை, மாநில கட்சிகளான சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகள் பின்னுக்கு தள்ளின. கடந்த 2009 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளை கைப்பற்றியது. 2014 மக்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

சட்டசபை தேர்தலை பொறுத்தவரையில், கடைசியாக அக்கட்சி கடந்த 1989-ல் ஆட்சியில் இருந்தது. இந்த நிலையில் ராகுலின் நடவடிக்கைகள் காங்கிரஸ் கட்சியை மீண்டும் மாநில அரசியலில் முன்னுக்கு கொண்டு வரும் முயற்சியாகவே பார்க்கப்படுகிறது.

.