''வைரலான சவுக்கிதார் புகைப்படம் '' - பேப்பர் கப்புகளை திரும்ப பெற்றது ரயில்வே

'நானும் காவல்காரன்தான்' என பொருள்படும் 'மெய்ன் பி சவுக்கிதார்' என்ற பிரசாரத்தை பாஜகவினர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தி வருகின்றனர்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''வைரலான சவுக்கிதார் புகைப்படம் '' - பேப்பர் கப்புகளை திரும்ப பெற்றது ரயில்வே

சதாப்தி எக்ஸ்ப்ரஸ் ரயிலில் சவுக்கிதார் பேப்பர் கப்புகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.


New Delhi: 

சவுக்கிதார் பேப்பர் கப்புகள் வைரலானதை தொடர்ந்து, அவற்றை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டது. 'நானும் காவல்காரன்தான்' என பொறுள் படும் 'மெய்ன் பி சவுக்கிதார்' என்ற பிரசாரத்தை பாஜகவினர் மக்களவை தேர்தலில் பயன்படுத்தி வருகின்றனர். 

இதையொட்டி, பிரதமர் மேடி, அமித் ஷா உள்ளிட்ட தலைவர்கள் தங்களது சோஷியல் மீடியா அக்கவுன்ட்டுகளில் சவுக்கிதார் என்ற பெயரை சேர்த்துக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கத்கோடம் சதாப்தி விரைவு ரயிலில் 'மெய்ன் பி சவுக்கிதார்' என்று எழுதப்பட்ட பேப்பர் கப்புகள் விநியோகம் செய்யப்பட்டன. 

இதனை புகைப்படமாக எடுத்து சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அவை வைரலாகியதால், ரயில்வே நிர்வாகம் எப்படி பாஜகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யலாம் என்று பரவலாக கேள்வி எழுந்தது. 
 


இந்த நிலையில், சவுக்கிதார் பேப்பர் கப்புகளை ரயில்வே நிர்வாகம் திரும்பப் பெற்றுக் கொண்டதுடன், இந்த பேப்பர் கப்புகளை அளித்த கான்ட்ராக்டருக்கு ரூ. 1 லட்சத்தை அபராதமாக விதித்திருக்கிறது. 

இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது. ஐ.ஆர்.சி.டி.சி. ஒப்புதல் அளித்து இந்த பேப்பர் கப்புகள் வந்ததா அல்லது வேற எந்த முறையில் இந்த தவறு நிகழ்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 

ரபேல் விவகாரத்தில் பெரும் மோசடி செய்ததாக ராகுல் காந்தி மோடிக்கு எதிராக பிரசாரம் செய்து வருகிறார். இதற்கு பதிலடியாக பிரதமர் மோடி 'நான் காவல்காரன்' என பொருள்படும் மெய்ன் பி சவுக்கிதார் என்ற பிரசாரத்தை இந்த மாதம் தொடங்கினார்.

(With inputs from PTI and ANI)சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................