கூட்டணியை வலுப்படுத்த ராகுலுக்கு சரத்பவார், சந்திரபாபு நாயுடு நெருக்கடி

புல்வாமா தாக்குதல் மற்றும் அதன் தொடர்ச்சியாக நடந்த சம்பவங்கள் எதிர்க்கட்சிகள் மத்தியில் கூட்டணியை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது.

 Share
EMAIL
PRINT
COMMENTS

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து விட்டது.


New Delhi: 

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து கூட்டணியை வலுப்படுத்த வேண்டும் என்று  ராகுல் காந்திக்கு சரத் பவாரும், சந்திரபாபு நாயுடுவும் வலியுறுத்த தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் வலுவான கூட்டணி அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் முயற்சி மேற்கொண்டு வந்தன. அந்த கூட்டணி காங்கிரஸ் தலைமையில் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியும், அகிலேஷ் யாதவும் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்து விட்டனர். 

டெல்லியைப் பொறுத்தவரையில் ஆம் ஆத்மி தங்களது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. மேற்கு வங்கத்தை பொறுத்தவரையில், மம்தாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைக்குமா என்பது கேள்வியை ஏற்படுத்தியுள்ளது. 

8qq6jkkg

இந்த நிலையில் மம்தா மற்றும் கெஜ்ரிவாலுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துமாறு ராகுல் காந்தியை சந்திரபாபு நாயுடுவும், சரத் பவாரும் வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புல்வாமா தாக்குதலுக்கு முன்பு நிலைமை தேசிய அரசியல் வேறு மாதிரியாக இருந்தது. 

புல்வாமா, விமானப்படை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களுக்கு பின்னர் பாஜகவின் செல்வாக்கு உயர்ந்திருப்பதாக கருதப்படுகிறது. எனவே பாஜக கூட்டணியை வீழ்த்துவதற்கு வலுவான கூட்டணி தேவை என்பதை எதிர்க்கட்சி தலைவர்கள் உணர்ந்திருக்கின்றனர். 

அந்த அடிப்படையில் கூட்டணி வியூகத்தை அமைக்க எதிர்க்கட்சி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். இதன்படி தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கும் ஆம் ஆத்மி மற்றும் தனித்துப் போட்டியிட முடிவு செய்திருக்கும் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. 

இதனால் தேசிய அரசியலில் இன்னும் ஓரிரு நாட்களில் முக்கிய திருப்பங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................