''மேற்கு வங்க வளர்ச்சியின் ஸ்பீடு ப்ரேக்கர் மம்தா'' : மோடி பிரசாரம்

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட இங்கு 4 முனை போட்டி காணப்படுகிறது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''மேற்கு வங்க வளர்ச்சியின் ஸ்பீடு ப்ரேக்கர் மம்தா'' : மோடி பிரசாரம்

சிலிகுரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

Siliguri, Bengal: 

மேற்கு வங்க வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கராக இருப்பவர் மம்தா என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவை தொகுதிகள் உள்ளன. மற்ற மாநிலங்களை விட இங்கு 4 முனை போட்டி காணப்படுகிறது.

ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாஜக, காங்கிரஸ் ஆகியவை தனித்து களம் கண்டுள்ளன. ஆளும் கட்சிக்கு எதிரான அலை வீசினாலும், அந்த எதிர்ப்பு வாக்குகள் சிதைய வாய்ப்பு உள்ளதால் மம்தா கட்சிக்கு வெற்றி பிரகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இங்கு 20  தொகுதிகளை குறிவைத்து பாஜக தேர்தல் பணி செய்து வருகிறது. இந்த நிலையில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி சிலிகுரியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்க வளர்ச்சிக்கு ஸ்பீடு பிரேக்கராக இருப்பவர் மம்தா.

மத்திய அரசின் சுகாதார திட்டமான ஆயுஷ்மான் பாரத்தை மேற்கு வங்கத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா தடுக்கிறார்.

ஏழைகளுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டால் அவர்கள் 5 லட்சம் ரூபாய் வரை இலவசமாக சிகிச்சை பெற்றுக்கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதை மாநிலத்தில் நிறைவேற்ற விடாமல் மம்தா இடையூறு செய்கிறார்.

இவ்வாறு மோடி பேசினார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................