This Article is From Mar 25, 2019

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!

மம்தா - கமல் சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால் இது அரசியல் தொடர்பான சந்திப்பு என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க முதல்வர் மம்தாவுடன் கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!!

தமிழகம் மற்றும் புதுவையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

Kolkata:

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தா தலைமை செயலகத்தில் உள்ள மம்தா பானர்ஜியின் அதிகாரப்பூர்வ முதல்வர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. 

இந்த சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், மம்தாவுடன் பேசியது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்ய கட்சி, தற்போது மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடவில்லை. திமுக மற்றும் அதிமுக கட்சிகளை விமர்சித்து கமல் பேசி வருகிறார். 

மேற்கு வங்கத்தை பொறுத்தளவில் எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைக்காமல் மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி போட்டியிடுகிறது. இங்கு காங்கிரஸ் - திரிணாமூல் காங்கிரஸ் இடையே கூட்டணி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது நடைபெறாமல் போனது. 

மக்களவை தேர்தல் 2019: மற்ற கட்சிகளை கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் மிகப்பெரிய தேர்தல் வாக்குறுதியை அளித்துள்ளது. அதில், வேலைவாய்ப்பு, பெண்களுக்கு சமவேலைவாய்ப்பு, ஆண்களுக்கு இணையான சம்பளம், விவசாயிகளுக்கு 100 சதவீத லாபம் வழங்க வழி வகுக்கப்படும் உள்ளிட்ட ஏராளமான வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.


மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையில் முக்கியமாக, 5 வருட ஆட்சி காலத்திற்குள் 50 லட்சம் வேலைவாய்ப்பு உருவாக்கப்படும், அரசு வேலைகளில் பெண்களுக்கு 50% இடஓதுக்கீடு, விவசாயிகளுக்கு உற்பத்தி செலவுகளுக்கு மேல் 100% லாபம் கிடைக்க திட்டங்கள், ரேஷன் பொருட்கள் வீட்டில் வழங்கப்படும், டோல் கட்டணம் முற்றிலும் ஒழிக்கப்படும், கல்வி மாநிலப் பட்டியலில் மீண்டும் கொண்டுவரப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன.

.