''வேலை வாய்ப்பை கொண்டுவருவதுதான் முதல் பணி'' : என்.டி.டி.வி.க்கு தயாநிதி மாறன் பேட்டி!!

திமுக கூட்டணியின் தரப்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் நிறுத்தப்பட்டுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
''வேலை வாய்ப்பை கொண்டுவருவதுதான் முதல் பணி'' : என்.டி.டி.வி.க்கு தயாநிதி மாறன் பேட்டி!!

மீண்டும் மத்திய சென்னை தொகுதியில் இருந்து மக்களவைக்கு செல்வேன் என்கிறார் தயாநிதி.

Chennai: 

மத்திய சென்னை தொகுதியில் வேலை வாய்ப்பை கொண்டுவருவதுதான் முதல் பணி என்ற அந்த தொகுதியின் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் கூறியுள்ளார். 

திமுக கூட்டணியின் தரப்பில் மத்திய சென்னை மக்களவை தொகுதியின் திமுக வேட்பாளராக தயாநிதி மாறன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பாக பாமக வேட்பாளர் சாம் பால் நிறுத்தப்பட்டுள்ளார். 

இதே தொகுதியில் இருந்து மக்களவைக்கு 2 முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தயாநிதி. ஆனால் கடந்த 2014-ல் அவர் அதிமுகவிடம் தோல்வியடைந்தார். இந்த முறை காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக,விசிக உள்ளிட்ட கட்சிகள் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளன. இதனால், தயாநிதி மாறன் மீண்டும் வெற்றி பெறுவார் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 

மத்திய சென்னையில் போட்டியிடுவது குறித்து என்.டி.டி.வி.க்கு தயாநிதி மாறன் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது-

கடந்த 2004-ல் இருந்து 2014 வரையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு ஆரம்ப சம்பளமே ரூ. 30 ஆயிரத்தில் இருந்து ரூ. 40 ஆயிரமாக இருந்தது. ஆனால் கடந்த 5 ஆண்டுகளில் மோடி ஆட்சியின்போது பொறியியல் படித்தவர்கள் ரூ. 8 ஆயிரத்தை ஆரம்ப சம்பளமாக பெற்றுச்செல்கின்றனர். பொறியியல் படித்தவர்கள் தற்போது ஸ்விக்கி, ஊபர் ஈட்ஸ் போன்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் டெலிவரி பாயாக வேலை பார்க்கின்றனர். இவ்வாறு தயாநிதி கூறினார். 

அதிமுக கூட்டணியின் பாமக வேட்பாளர் சாம் பால் கூறுகையில், ''அடுத்த 6 மாதம் முதல் ஓராண்டுக்குள்ளாக மத்திய சென்னை தொகுதியில் சுமார் 2 லட்சம்பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம்'' என்றார். 

இதேபோன்று மத்திய சென்னை தொகுதியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் கமீலா நாசர் போட்டியிடுகிறார். அவர் அளித்துள்ள பேட்டியில், 'குடிசையில்லா தமிழகத்தை உருவாக்குவோம். தமிழகம் முழுவதும் 50 லட்சம் வேலைவாய்ப்பை உருவாக்குவோம். இது நடைமுறையில் சாத்தியம்' என்று தெரிவித்தார். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................