பாஜக தலைவர் அமித் ஷாவை எதிர்த்து, வலுவான போட்டியாளரை களத்தில் இறக்கியது காங்கிரஸ்!!

பாஜக தலைவர் அமித் ஷா, குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் முன்னதாக மூத்த தலைவர் அத்வானி எம்.பி.யாக. இருந்தார்.

பாஜக தலைவர் அமித் ஷாவை எதிர்த்து, வலுவான போட்டியாளரை களத்தில் இறக்கியது காங்கிரஸ்!!

காந்தி நகர் வடக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ சிஜே. சாவ்தா வேட்பு மனு தாக்கல் செய்தார்.

Gandhinagar:

குஜராத்தில் பாஜக தலைவர் அமித் ஷாவை எதிர்த்து வலுவான போட்டியாளரை காங்கிரஸ் கட்சி களத்தில் இறக்கியுள்ளது. அமித் ஷாவுக்கு எதிராக காந்தி நகர் வடக்கு சட்டசபை தொகுதியின் எம்எல்ஏ சி.ஜே. சாவ்தாவை காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியுள்ளது. 

பாஜக தேசிய தலைவர் அமித் ஷா தனது சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் காந்தி நகர் மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்கு முன்பாக பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி காந்தி நகர் தொகுதியின் எம்.பி.யாக இருந்தார். பாஜகவின் கோட்டையாக கருதப்படும் காந்தி நகர் தொகுதியில் இருந்து 6 முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் அத்வானி. 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக பாஜக தலைவர் அமித் ஷாவுக்கு காந்தி நகர் தொகுதியில் போட்டியிட பாஜக வாய்ப்பு அளித்துள்ளது. அவரை எதிர்த்து வலுவான வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. 

இந்த சூழலில் காந்தி நகர் வடக்கு சட்டசபை தொகுதியில் எம்எல்ஏ சி.ஜே. சாவ்தாவை வேட்பாளராக காங்கிரஸ் களத்தில் நிறுத்தியுள்ளது. அவர் தாகூர் சமுதாயத்தை சேர்ந்தவர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை ஆதரிக்கின்றனர். 

வேட்பாளராக நிறுத்தப்பட்டது குறித்து சாவ்தா அளித்த பேட்டியில், 'அமித் ஷாவுக்கு எனக்குமான போட்டியாக இதனை கருதக் கூடாது. காங்கிரஸ் - பாஜக இடையிலான போட்டியாகத்தான் இதனை கருத வேண்டும். அமித் ஷா பாஜகவுடைய தேசிய தலைவராக இருக்கிறார் என்றால் அவர் எதற்காக பாதுகாப்பான தொகுதியில் போட்டியிட வேண்டும்?' என்றார். 

Newsbeep

காந்தி நகரை பொறுத்தளவில் குஜராத்தில் இருக்கும் 26 மக்களவை தொகுதிகளில் அதிக வாக்காளர்களை கொண்டதாக இந்த தொகுதி உள்ளது. இங்கு மொத்தம் 19.21 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். காந்திநகர் வடக்கு, கலோல், சனானந்த், கட்லோதியா, வேஜல்பூர், நாராணபுரா மற்றும் சபர்மதி ஆகிய 7 சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியதாக காந்தி நகர் மக்களவை தொகுதி உள்ளது. 

2017 சட்டசபை தேர்தலின்போது, கட்லோடியா, வேஜல்பூர், நாராண்புரா, சபர்மதி, சனாந்த் ஆகிய தொகுதிகள் பாஜகவால் கைப்பற்றப்பட்டன. காந்தி நகர் வடக்கு மற்றும் கலோல் தொகுதிகள் காங்கிரஸ் வசம் சென்றன.