This Article is From Mar 17, 2019

அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியீடு!

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மக்களவை தேர்தலில் போட்டியிடுவோரின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று காலை அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டார்.

அமமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் முதற்கட்ட பட்டியல் வெளியீடு!

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதில், அதிமுக தலைமையிலான கூட்டணியில், பாமக,

பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, என்.ஆர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றுள்ளன.

இதேபோல், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொமதேக, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகளும் பங்கேற்றுள்ளன.

திமுக - அதிமுக உள்ளிட்ட இரண்டு கட்சிகளும், கூட்டணி கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து தொகுதி வேட்பாளர்கள் பெயரை அறிவித்து வருகிறது.

அந்தவகையில், மக்களவை தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எஸ்.டி.பி.ஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு மத்திய சென்னை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், முதற்கட்டமாக 24 நாடாளுமன்ற தொகுதிகளில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும், 18 சட்டமன்ற தொகுதிகளில் 9 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலையும் டிடிவி தினகரன் இன்று காலை வெளியிட்டார்.

அதன்படி, மக்களவை தேர்தலுக்கன வேட்பாளர்கள் பட்டியல்,

1. திருவள்ளூர் - பொன்.ராஜா

2. தென் சென்னை - இசக்கி சுப்பையா

3. ஸ்ரீபெரும்பதூர் - ஜி தாம்பரம் நாராயணன்

4. காஞ்சிபுரம் - முனுசாமி

5. விழுப்புரம் - வானூர் என் கணபதி

6. நாமக்கல் - பிபி சாமிநாதன்

7. ஈரோடு - கேசி செந்தில் குமார்

8. நெல்லை - ஞான அருள் மணி

9. கரூர் - என் தங்கவேல்

10. திருச்சி - சாருபாலா தொண்டைமான்

11. பெரம்பலூர் - எம். ராஜசேஎக்ரன்

12. சிதம்பரம் - ஏ.இளவரசன்

13. மயிலாடுதுறை - எஸ் செந்தமிழன

14. நாகப்பட்டினம் - செங்கொடி

15. தஞ்சாவூர் - முருகேசன்

16. சிவகங்கை - தேர்போகி வி பாண்டி

17. மதுரை - டேவிட் அண்ணாதுரை

18. ராமநாதபுரம் - வது.ந ஆனந்த்

19. தென்காசி - ஏஎஸ் பொன்னுதாய்

20. திருநெல்வேலி - ஞான அருள் மணி

21. நீலகிரி - எம். ராமசாமி

22. திருப்பூர் - செல்வம்,

23. கோவை - அப்பாதுரை

24. பொள்ளாச்சி - முத்துக்குமார்

18 சட்டமன்ற இடைத்தேர்தல்களில் 9 சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் விவரம்

1. பூவிருந்தவல்லி - ஏழுமலை

2. பெரம்பூர் - வெற்றிவேல்

3. திருப்போரூர் - கோதண்டபாணி போட்டி

4. குடியாத்தம் - ஜெயந்தி பத்மநாபன்

5. ஆம்பூர் - பாலசுப்பிரமணி

6. அரூர் - முருகன்

7. மானாமதுரை - மாரியப்பன் கென்னடி

8. சாத்தூர் - சுப்பிரமணியன்

9. பரமக்குடி - முத்தையா

.