This Article is From May 19, 2019

மேற்குவங்கத்தில் பயங்கர வன்முறை; போலீஸ் தடியடி - நாட்டுவெடிகுண்டு வீச்சு!

மக்களவைத் தேர்தல் 2019: கொல்கத்தாவின் ஜாதவ்பூர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திர மோசடி நடைபெறுவதகாவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

மேற்குவங்கத்தில் பயங்கர வன்முறை; போலீஸ் தடியடி - நாட்டுவெடிகுண்டு வீச்சு!

General elections 2019: வடகொல்கத்தாவில் நடந்த வன்முறையில் ஒரு கார் சேதப்படுத்தப்பட்டது.

ஹைலைட்ஸ்

  • மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெறும் 7 வாக்குச்சாவடிக்களில் வன்முறை
  • 2 பாஜக வேட்பாளர்கள் தாங்கள் தாக்கப்பட்டதாக புகார்
  • மத்திய படைகள் வாக்குஎண்ணிக்கை முடியும் வரை பாதுகாப்பு அளிக்க உள்ளது.
Kolkata:

மேற்குவங்கத்தில் 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடந்து வரும் நிலையில், அங்கு பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களவைத் தேர்தலுக்கான 7வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடந்து வருகிறது. மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு 59 மக்களவைத் தொகுதிகளில் இன்று நடந்து வருகிறது.

பீகாரில் 8, ஜார்கண்டில் 3, பஞ்சாப்பில் 13, மேற்கு வங்காளத்தில் 9, இமாசலபிரதேசத்தில் 4, மத்திய பிரதேசத்தில் 8, உத்தரபிரதேசத்தில் 13, சண்டிகரில் ஒன்று என 59 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடக்கிறது. இதற்காக மக்கள் ஆர்வத்துடன் காலையிலேயே வந்து வாக்களித்து வருகின்றனர்.

இறுதிகட்ட வாக்குப்பதிவு நடந்த வரும் மூம்முரமாக நடந்து வரும் நிலையில், மேற்குவங்கத்தில் 3 பாஜக வேட்பாளர்கள் தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர். முந்தைய தேர்தல்களை போலவே பயங்கர வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்களிடையே கடும் மோதல் ஏற்பட்டது.

இதில் பாஷிரத், ஜாதவ்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர், வாக்காளர்களை வாக்களிக்க விடாமல் கள்ளஓட்டுகளை போட முயன்றதாக புகார் எழுந்தது. இதையடுத்து அங்கு ஆய்வு மேற்கொள்ள சென்ற பாஜக வேட்பாளர்களை தடுத்து நிறுத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனிடையே ஜாதவ்பூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அனுபம் ஹாஸ்ராவின் கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் நடத்திய தாக்குதலில் கண்ணாடி உடைந்தது. அதனால், அங்கு பெரும் பதற்றம் நிலவுவதால் மத்திய பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதேபோல், சில வாக்குச்சாவடிகளில் நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்ட சம்பங்களும் நிகழ்ந்துள்ளது. பரசராத்தில் உள்ள பாஜக அலுவலகம் மீது கல்வீச்சு நடந்துள்ளது. இதுகுறித்து மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வன்முறையில் ஈடுபடுவார்கள் என்று நாங்கள் எதிர்பார்த்தோம் அதனால், அங்கு மத்திய பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். வன்முறையில் ஈடுபடுவதையே எண்ணமாக கொண்டுள்ளனர் திரிணாமுல் கட்சியினர்.

மேலும், கொல்கத்தாவின் ஜாதவ்பூர் உட்பட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளிலும் வாக்குப்பதிவு எந்திர மோசடி நடைபெறுவதகாவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது. கோபேக் கோஷங்களுடன், பார்க் சர்க்ஸ் அருகில் ராகுல் சின்ஹா தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

.