‘’60 சீட்டுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறாது’’ : பியூஷ் கோயல் கணிப்பு

தேர்தல் ஆதாயத்திற்காக பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சி பயன்படுத்துவதாகவும், இது ஒருபோது பலன் அளிக்காது என்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்திருக்கிறார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘’60 சீட்டுக்கு மேல் காங்கிரஸ் வெற்றி பெறாது’’ : பியூஷ் கோயல் கணிப்பு

தமிழகத்தில் அதிமுக – பாஜக கூட்டணி அமைவதற்கு பியூஷ் கோயல் தீவிரமாக செயல்பட்டார்.


Hyderabad: 

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 60 சீட்டுக்கு மேல் வெற்றி பெறாது என்று மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார். பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.

ஐதராபாத்தில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது-

தேர்தலுக்கு 60 நாட்களே இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தியை களத்தில் இறக்கி உள்ளது. அவரது அண்ணன் ராகுலை காப்பாற்றுவதற்காக காங்கிரஸ் இந்த நடவடிக்கை எடுத்திருக்கிறது. இது பலன் அளிக்கப்போவதில்லை.

நாட்டிற்கு மிகவும் வலுவான, பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலைவர்கள் தேவைப்படுகிறார்கள். தீடீர் அரசியல்வாதிகள் யாரும் தேவையில்லை.

மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும். காங்கிரசுக்கு 60 சீட்டுக்கு மேல் கிடைக்காது.

அயோத்தியில் ராமர் கோயில் நிச்சயம் கட்டப்படும். காங்கிரஸ் கட்சியின் கபில் சிபல்தான் ராமர் கோயில் கட்டுவதற்கு முட்டுக்கட்டை போட்டு வருகிறார். உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தில் தாமதாக தீர்ப்பு வழங்குவதற்கு அவர்தான் காரணம்.

இவ்வாறு அவர் கூறினார்.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................