கர்நாடகாவில் 24 மணி நேரத்தில் பாஜக ஆட்சியமைக்கும்: எடியூரப்பா

Lok Sabha Elections 2019: மக்களவை தேர்தலில் கர்நாடகா மக்கள் 22 தொகுதிகளில் எங்களுக்கு வெற்றி வாய்ப்பை கொடுத்தால், 24 மணி நேரத்தில் நாங்கள் ஆட்சியமைப்போம் என பொதுக்கூட்டத்தில் எடியூரப்பா கூறியள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS

Lok Sabha Elections 2019: BS Yeddyurappa has often been in the headlines over his pronouncements


Bengaluru: 

ஹைலைட்ஸ்

  1. 28 தொகுதிகளில் பாஜக 16 தொகுதிகளை கைவசம் கொண்டுள்ளது.
  2. பாக். தாக்குதல் கர்நாடகா வெற்றிக்கு உதவும் என்று கூறியுள்ளார்.
  3. ஜனதாதளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்தது.

மக்களவை தேர்தலில் கர்நாடகாவில் பாஜக 22 தொகுதிகளில் வெற்றி பெற்றால், 24 மணி நேரத்தில் ஆட்சியமைப்போம் என எடியூரப்பா கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2014 மக்களவைத் தேர்தலில் பாஜக 28 இடங்களில் 16 இடங்களில் வென்றது. இதேபோல், சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக பாஜக அமைந்த போதிலும் ஆட்சி அமைக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், முதல்வர் பதவியேற்று பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா ராஜினாமா செய்தார். காங்கிரஸ் ஆதரவுடன், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

இதை நான் தைரியத்தில் சொல்லவில்லை, மக்களவை தேர்தலில் கர்நாடகா மக்கள் எங்களை 22 தொகுதிகளில் வெற்றி பெற செய்துவிட்டால், அடுத்து 24 மணி நேரத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என பொதுக்கூட்டத்தில் பேசிய எடியூரப்பா கூறியுள்ளார்.

மேலும், காங்கிரஸை சேர்ந்த 20 எம்எல்ஏக்கள் குமாரசாமி முதல்வராக இருப்பதை விரும்பவில்லை. அவர்கள் அதிருப்தியுடன் உள்ளார்கள் என்று கூறினார். மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எடியூரப்பா பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால், தேர்தலுக்கு பின்னர் ஆட்சி மாற்றம் நடைபெறலாம் என கருதப்படுகிறது.

முன்னதாக, கடந்த மாதம், பாலகோட் தாக்குதல் குறித்தும் எடியூரப்பா சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதில், "பாகிஸ்தானுக்கு எதிராக நாம் பாலகோட்டில் விமானத் தாக்குதல் நடத்திய பின் நரேந்திர மோடிக்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவு அலை பெருகியுள்ளது. இதனால், 22 இடங்களை நாம் கர்நாடகத்தில் வென்றுவிடலாம்" எனத் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................