பாஜகவுக்கு உதவுகிறது காங்கிரஸ்! - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது, எனினும் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுக்கு உதவுகிறது காங்கிரஸ்! - அரவிந்த் கெஜ்ரிவால் கடும் தாக்கு!

காங்கிரசுக்கு 2 தொகுதிகளை ஒதுக்கீட ஆம் ஆத்மி தயாராக இருந்தது.

New Delhi:

டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி கிடையாது என்று காங்கிரஸ் அறிவித்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார்.

டெல்லி காங்கிரஸ் கமிட்டியின் முடிவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார் என டெல்லி காங்கிரஸ் தலைவர் ஷீலா தீட்சித் தெரிவித்ததை தொடர்ந்து, ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காங்கிரஸ் பாஜகவுக்கு உதவி செய்கிறது என தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் உள்ள 7 தொகுதிகளில் 6 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது, எனினும் கூட்டணி பேச்சுவார்த்தைகளுக்குத் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதேபோல், நிகழும் பல்வேறு சம்பவங்களை கருதி கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு தொகுதிகளும் பிரித்து வைக்கப்பட்டதாக தெரிகிறது. அந்த வகையில், காங்கிரசுக்கு இரண்டு தொகுதிகள் வழங்க ஆம் ஆத்மி தயாராக இருந்துள்ளது.

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கூறும்போது, டெல்லியில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தயாராக இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அதனை உறுதிப்படுத்தும் வகையில், ஆம் ஆத்மியுடன் கூட்டணி இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவால் தனது டிவிட்டர் பதிவில், ஒட்டு மொத்த நாடும் மோடி அமித்ஷாவை வீழ்த்த வேண்டும் என்று நினைக்கும் போது, காங்கிரஸ் பாஜகவுக்கு உதவுவது போல் பாஜக எதிர்ப்பு ஓட்டுகளை பிரிக்கும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி மூத்த தலைவர் கோபால் ராய், காங்கிரஸ் பாஜகவுக்கு உதவுவதற்கு முடிவு செய்துள்ளது. காங்கிரசுக்கு நாட்டை விட கட்சி பெரிதாக நினைக்கிறது. பஞ்சாபில், ஆம் ஆத்மியை தோற்கடிக்க காங்கிரசுக்கு பாஜக உதவியது. அதேபோல், தற்போது டெல்லியில் காங்கிரஸ் செய்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

More News