This Article is From May 13, 2019

காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டத்தை புறக்கணிக்கும் மம்தா, மாயாவதி!

அனைத்து எதிர்கட்சி தலைவர்களும், ஒற்றுமை குறித்த கேள்விகளை கவனமாக தவிர்த்து வருகின்றனர். இதில் மம்தாவும், மாயாவதியும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர்.

மம்தாவும், மாயாவதியும் காங்கிரசுடன் நெருக்கமான தொடர்பு வைப்பதை தவிர்த்து வருகின்றனர்.

New Delhi:

வாக்கு எணிக்கைக்கு முன்னதாக நடைபெறும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சி கூட்டத்தை மம்தா பானர்ஜி, மாயாவதி மற்றும் அவரது கூட்டணியான சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகிய மூன்று எதிர்கட்சி தலைவர்களும் இந்த கூட்டத்தை புறக்கணிப்பார்கள் என்று கூறப்படுகிறது.

கடந்த வாரம் மேற்குவங்கம் சென்ற ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜியுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, மம்தா தரப்பில் இருந்து, மே.23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்பு எந்தவொரு கூட்டமும் தேவையில்லை என்று எதிர்மறை பதில்களையே தெரிவித்துள்ளார். இதேபோல், மாயாவதி தரப்பில் இருந்தும் எதிர்மறை பதில்களே கிடைத்துள்ளது.

தேர்தல் முடிவுகள் எதிர்கட்சிகளுக்கு சாதகமாக வரும் பட்சத்தில் பிரதமர் யார் என்பதை அப்போது முடிவு செய்ய வேண்டும் என்ற காரணத்திற்காகவே, அனைத்து எதிர்கட்சி தலைவர்களும், ஒற்றுமை குறித்த கேள்விகளை கவனமாக தவிர்த்து வருகின்றனர். இதில் மம்தாவும், மாயாவதியும் பிரதமராக வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளனர். ஏற்கனவே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உட்பட சில எதிர்கட்சி தலைவர்கள் முன்மொழிந்துள்ளார்.

அதனால், தான் மம்தாவும், மாயாவதியும் காங்கிரசுடன் நெருக்கமான தொடர்பு வைப்பதை தவிர்த்து வருகின்றனர். இதே காரணத்திற்காகவே இருவரும் தங்களது மாநிலங்களில் காங்கிரசுடன் கூட்டணி வைப்பதையும் தவிர்த்து வருகின்றனர்.

இதேபோல், தேசிய கட்சிகளாகன பாஜக மற்றும் காங்கிரஸுக்கு ஆட்சி அமைப்பதற்கு தேவையான இடங்கள் கிடைக்காதபட்சத்தில், மாயாவதியும், மம்தாவும் எடுக்கும் முடிவுகள் அடுத்த ஆட்சியை முடிவு செய்யும் எனக் கூறப்படுகிறது. எனவேதான், அவர்கள் இருவரும் காங்கிரஸ் கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளமாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏழு கட்டங்களாக நடைபெறும் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் மே.23 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. இந்நிலையில், மே 21 ஆம் தேதி டெல்லியில், காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான முயற்சிகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டு வருகிறார்.

.