காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி!!

ஆந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வாக்கு சேகரிக்க உள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட மம்தாவும், சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி!!

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.


Kolkata: 

காங்கிரஸ் கட்சியால் புறக்கணிக்கப்பட்ட மேற்கு வங்க முதல்வரும், திரிணாமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியும், தெலுங்கு தேச கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடுவும் கூட்டணி அமைத்துள்ளனர். 

ஆந்திராவில் தெலுங்கு தேச கட்சியை ஆதரித்து மம்தா பிரசாரம் மேற்கொள்வார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடன் மற்ற சில எதிர்க்கட்சி தலைவர்களும், நல்லெண்ண மற்றும் நட்பின் அடிப்படையில் சந்திரபாபு நாயுடு கட்சிக்கு பிரசாரம் செய்ய உள்னர். 

இதுகுறித்து திரிணாமூல் காங்கிரசின் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ''இந்த மாத இறுதிக்குள் மம்தா பானர்ஜி ஆந்திராவுக்கு சென்று அங்கு ஒன்று அல்லது 2 நாட்களுக்கு தேர்தல் பிரசாரம் செய்வார். கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. அதன் அடிப்படையில் இந்த பிரசாரம் செய்யப்படவுள்ளது'' என்றார். 

மத்தியில் பாஜகவுக்கு எதிராக வலுவான கூட்டணியை அமைப்பதற்கு ஆந்திர முதல்வரும்,தெலுங்கு தேச கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். குறிப்பாக மேற்கு வங்கத்தில் கடந்த ஜனவரி 19-ம்தேதி பிரமாண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

இதன் அடிப்படையில் காங்கிரஸ்,தெலுங்குதேசம், திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை அடங்கிய மெகா கூட்டணி உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், காங்கிரஸ் இந்த கட்சிகளுடன் கூட்டணி  அமைக்க ஆர்வம் காட்டவில்லை.

குறிப்பிடும் வகையில் பீகாரில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், மகாராஷ்டிராவில் தேசியவாத காங்கிரஸ், தமிழகத்தில் திமுக, கர்நாடகாவில் மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய மாநில கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி அமைத்து தேர்தலை காங்கிரஸ் எதிர் கொள்கிறது. 

மம்தாவின் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்டில் 3 தொகுதி, அந்தமானில் ஒரு தொகுதி, அசாமில் 6 தொகுதிகள், பீகாரில் 2 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் போட்டியிடுகிறது. அந்தமானில் மம்தாவுக்காக பிரசாரம் மேற்கொள்ள உள்ளவர் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன். சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................