This Article is From May 20, 2020

எதிர்க்கட்சிகளின் மெகா சந்திப்பு - சோனியா காந்தி போடும் திட்டம்… மம்தாவும் பங்கேற்கிறார்!

இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

எதிர்க்கட்சிகளின் மெகா சந்திப்பு - சோனியா காந்தி போடும் திட்டம்… மம்தாவும் பங்கேற்கிறார்!

திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன

ஹைலைட்ஸ்

  • வெள்ளிக் கிழமை இந்த சந்திப்பு நடக்க உள்ளது
  • கொரோனா விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்
  • 18 கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது
New Delhi:

வீடியோ கான்ஃபரென்சிங் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள் சந்தித்து கொரோனா வைரஸ் விவகாரம் உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி அழைப்பு விடுத்துள்ளது. வரும் வெள்ளிக் கிழமை மதியம் இந்த சந்திப்பு நடக்கிறது. இந்த சந்திப்பின்போது, மத்திய அரசு கொரோனா வைரஸ் விவகாரத்தை எப்படி கையாண்டது, புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் விவகாரத்தில் அரசு எப்படி செயலாற்றியது, ஊழியர்கள் சடத்தில் மாற்றம் செய்தது, பல்வேறு நாடாளுமன்ற கமிட்டிகளின் செயல்பாடுகளுக்கு முடக்கப் போட்டது உள்ளிட்டப் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. வரும் வெள்ளியன்று மதியம் 3 மணிக்கு இந்த சந்திப்பு நடக்கும்போது, அரசு அறிவித்த 20 லட்சம் கோடி ரூபாய் நிதித் தொகுப்பு பற்றியும் விவாதிக்கப்பட உள்ளது. 

இதுவரை 18 எதிர்க்கட்சிகளுக்கு இந்த சந்திப்பில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் திமுக, இடதுசாரிக் கட்சிகள், மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்டவை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன. மம்தா இது குறித்துக் கூறும்போது, “நான் சந்திப்பில் கலந்து கொள்வேன். இது நல்ல விஷயம்தான். கோவிட்-19 விவகாரம் பற்றி நாங்கள் விவாதிப்போம்,” என்றார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரும் இதில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா, “அரசு செய்யும் அனைத்து விஷயங்கள் குறித்தும் கண்காணிக்கப்படுகிறது என்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்று சந்திப்பு குறித்து கூறியுள்ளார். 

கடந்த மார்ச் மாதம், கொரோனா பரவலைக் கட்டுபடுத்தும் நோக்கில் தேசிய அளவு ஊரடங்கு உத்தரவு போடப்படும் சில நாட்களுக்கு முன்னதாகவே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. அப்போதிலிருந்து நாடாளுமன்றத்தின் பல்வேறு கமிட்டிகள் முற்றிலும் முடங்கியுள்ளன. 

இப்படிப்பட்ட பல கமிட்டிகளுக்குக் காங்கிரஸைச் சேர்ந்த பலரும் தலைவர்களாக உள்ளனர். அவர்கள், வீடியோ கான்ஃபெரன்சிங் மூலம் கமட்டி செயல்பட அரசு அனுமதிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர். 

கொரோனா வைரஸ் விவகாரத்தில் மத்திய அரசு, தொடர்ந்த தான்தோன்றித் தனமாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டி வருகின்றன எதிர்க்கட்சிகள். கொரோனா பரவல் ஆரம்பக்கட்டத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், மத்திய அரசுக்கு ஆதரவாக இருப்போம் என்று உறுதியளித்தன. 

ஆனால் கடந்த சில நாட்களாக அரசின் நடவடிக்கைகளால், மாநில அரசுகளும் எதிர்க்கட்சிகளும் மத்திய அரசின் செயல்களை விமர்சனம் செய்து வருகின்றன. 

.