லாக்டவுன் 4.0 வழிகாட்டுதல்கள்: வான்வழி மற்றும் மெட்ரோ போக்குவரத்துகளில் தளர்வுகள்!?

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.

இன்னும் இரண்டு வாரங்களுக்கு லாக்டவுன் நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

New Delhi:

கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25 அன்று முழு முடக்க(LOCKDOWN) நடவடிக்கை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றி பிரதமர் நரேந்திர மோடி, தற்போது அமலில் உள்ள முழு முடக்க நடவடிக்கை நீட்டிக்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இந்த நீட்டிக்கப்பட்ட முழு முடக்கத்தில் போக்குவரத்திற்கு தளர்வுகள் இருக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் விமான போக்குவரத்துகளுக்கு சில குறிப்பிட்ட பகுதிகளில் தளர்வுகள் அனுமதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான அறிவிப்புகள் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக “கொரோனா நம்மோடு பயணிக்கும். ஆனால், அது நம்முடைய இலக்குகளை பாதிக்க நாம் அனுமதிக்கக்கூடாது. நாம் முககவசங்களையும், தனி மனித இடைவெளியையும் கடைப்பிடிப்போம்” என பிரதமர் கூறியிருந்தார். சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுடன் வணிக வளாகங்கள் மற்றும், இதர மக்கள் புழங்கும் இடங்களுக்கான அனுமதி வழங்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கடந்த முறை முழு முடக்கம் நீட்டிக்கப்பட்டபோது, சிறு குறு கடைகள் தனித்தனியாக இயங்க அனுமதியளிக்கப்பட்டது.

மெட்ரோ சேவையில் தனி மனித இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு இயக்கப்படும் என்றும், நகர்ப்புறங்களில் கட்டுப்பாட்டு மண்டலங்களைத் தவிர்த்து மற்ற அனைத்து பகுதிகளிலும் கட்டுமானப் பணிகளுக்கு அனுமதியளிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90 ஆயிரத்தினை கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 4,987 நாடு முழுவதும் புதியதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக கண்டறியப்பட்டுள்ளனர். இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 90,927 ஆக உயர்ந்துள்ளதால் தற்போது முழு முடக்க நடவடிக்கை நான்காவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து தமிழகம், குஜராத் மற்றும் டெல்லி ஆகியவை அடுத்தடுத்து உள்ளன.