This Article is From Oct 14, 2019

லாகூரில் கூலி கேட்ட எலக்ட்ரீசியன் மீது வளர்ப்பு சிங்கத்தை ஏவி விட்ட நபர்...!

பராமரிப்பாளர் அலி ராசா பணம் கொடுக்க தாமதப்படுத்திக் கொண்டிருந்தார். முகமது ரபீக் தொடர்ந்து பணம் கேட்டதால் கோபமடைந்த அலி ராசா தன் வளர்ப்பு சிங்கத்தை அவர் மீது ஏவி விட்டுள்ளார்.

லாகூரில் கூலி கேட்ட எலக்ட்ரீசியன் மீது வளர்ப்பு சிங்கத்தை ஏவி விட்ட நபர்...!

பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு எண் 324இன் கீழ் அலி ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. (Representational)

Lahore:

லாகூரில் மத இடத்தின் பராமரிப்பாளர் ஒருவர் கூலி கேட்ட எலக்ட்ரீசியன் மீது  தன் வளர்ப்பு சிங்கத்தை கட்டவிழ்த்து விட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

பாகிஸ்தான் ஊடக அறிக்கையின்படி, பராமரிப்பாளர்  மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் செப்டம்பர் 9ஆம் தேதி பஞ்சாப் மாகாணத்தின் தலைநகரில் நடந்த போதிலும் இரண்டு நாட்களுக்கு முன்புதான் புகார் அளிக்கப்பட்டது. 

சிங்கம் ஏற்படுத்திய காயங்களுக்கு முறையான சிகிச்சை அளிப்பதாக பராமரிப்பாளர்  அலி ராசா உறுதியளித்ததால் அவர் மீது  எலக்ட்ரீஷியன் முகமதி ரபீக்  காவல்துறையில் வழக்கு பதிவு செய்யவில்லை. அலி  ராசா தனது காயங்களுக்கு சிகிச்சைக்கான இழப்பீடை தர மறுத்ததால் முகமது ரபீக்  காவல்துறையில் புகார் அளித்தார். 

மண்டபத்தில் சில வேலைகளுக்கு அலி ராசா முகமது ரபீக்கை நியமித்திருந்தார். முகமது ரபீக் வேலை முடிந்தவுடன் ஊதியம் கேட்டபோது, அலி ராசா சில நாட்கள் கழித்து வருமாறு  கூறியுள்ளார். 

பராமரிப்பாளர் அலி ராசா பணம் கொடுக்க தாமதப்படுத்திக் கொண்டிருந்தார். முகமது ரபீக் தொடர்ந்து பணம் கேட்டதால் கோபமடைந்த அலி ராசா தன் வளர்ப்பு சிங்கத்தை அவர் மீது ஏவி விட்டுள்ளார். முகமது ரபீக்கின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மீட்டுள்ளனர். பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் பிரிவு எண் 324இன் கீழ் அலி ராசா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)Click for more trending news


.