12 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தை

உத்தர பிரதேச மாநிலம் பராய்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.

12 வயது சிறுமியை கடித்துக் கொன்ற சிறுத்தை

சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Bahraich:

உத்தர பிரதேசத்தில் 12 வயது சிறுமியை சிறுத்தைப்புலி ஒன்று கடித்துக் கொன்றுள்ளது. பராய்ச் மாவட்டம் கக்ரஹா பகுதியில் உளள் மஜ்ஹர் என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 

சிறுமி ரிங்கி தனது வீட்டை விட்டு வெளியே சென்று கடந்த நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சிறுத்தைப்புலி ரிங்கியை கடித்து இழுத்துச் சென்றது. 

சிறுமியை காணாததால் அவரது பெற்றோரும் ஊர்மக்களும் தேடிப்பார்த்தனர். இரவு நேரத்தில் வயல் வெளியில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து பிரேத பரிசோதனைக்கு சிறுமியின் உடல் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிறுமியைக் கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். 

More News