“தேர்தலுக்குத் தயாராக இருங்கள்!“- கர்நாடக முதல்வரின் மகன் பேச்சால் பரபரப்பு!

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் இருக்கும் 28 தொகுதிகளில் 25-ஐ பாஜக கைப்பற்றியது.

 Share
EMAIL
PRINT
COMMENTS
“தேர்தலுக்குத் தயாராக இருங்கள்!“- கர்நாடக முதல்வரின் மகன் பேச்சால் பரபரப்பு!

நிகில் குமாசராமி, சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்ல மாண்டியா தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். 

Bengaluru: 

கர்நாடகத்தில் காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து ஆட்சியமைத்துள்ளது. இரு கட்சிகளுக்கும் இடையில் தொடர்ந்து உரசல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில் கர்நாட முதல்வர் குமாரசாமியின் மகன், நிகில் குமாரசாமி, “தேர்தலுக்குத் தயாராக இருங்கள்” என்று மஜத தொண்டர்கள் முன்னிலையில் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பைக் கிளப்பியுள்ளது. அந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து NDTV-யால் உறுதி செய்ய முடியவில்லை. 

அந்த வீடியோவில் நிகில் குமாரசாமி, “தேர்தல் எப்போது வரும் என்று நமக்குத் தெரியாது. அடுத்த ஆண்டே வரலாம். அல்லது இரண்டு ஆண்டு அல்லது மூன்று ஆண்டுகள் கழித்துக் கூட வரலாம். ஆனால், நாம் தயாராக இருக்க வேண்டம். இப்போதில் இருந்தே அதற்கான வேலைகளை ஆரம்பிக்க வேண்டும்” என்று பேசுவது போன்று உள்ளது. 

நிகில் குமாசராமி, சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில்ல மாண்டியா தொகுதியில் நின்று தோல்வியடைந்தார். 

நிகில் இப்படி கருத்து சொன்னாலும், அவரே மீண்டும், “மஜத- காங்கிரஸ் தலைமையிலான அரசுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. அது முழு பதவிக் காலத்தையும் முடிக்கும். ஊடகச் செய்திகள்தான் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. ஆனால், நிலைமை அப்படியில்லை” என்றும் பேசியுள்ளார். 

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கர்நாடகத்தில் மொத்தம் இருக்கும் 28 தொகுதிகளில் 25-ஐ பாஜக கைப்பற்றியது. மஜத- காங்கிரஸ் கூட்டணி இரண்டு இடங்களில் மட்டுமே வெற்றிவாகை சூடியது. 

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................