This Article is From Apr 21, 2020

மான் குட்டியின் மீது ஏறி சவாரி செய்யும் சோம்பேறி குரங்கு! க்யூட்டான வீடியோ

பதிவிட்ட குறுகிய நேரத்தில் இந்த வீடியோ 28 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 2,600-க்கும் அதிகமானோர் இந்த வீடியோவை விரும்பியுள்ளனர்.

மான் குட்டியின் மீது ஏறி சவாரி செய்யும் சோம்பேறி குரங்கு! க்யூட்டான வீடியோ

31 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ படு க்யூட்டாக அமைந்துள்ளது. இதனை நெட்டிசன்கள் ரசித்து கமென்ட் செய்து வருகின்றனர்.

மான் குட்டி ஒன்றின் முதுகு மீது ஏறி, குரங்கு ஒன்று சவாரி செய்கிறது. இந்த வீடியோ இணைத்தில் அதிகம் ரசிக்கப்பட்டு வருகிறது.

சேட்டை, சுட்டித்தனத்திற்கு உதாரணமாக பலரும் குரங்கை சொல்வார்கள். எந்த இடத்தில் இருந்தாலும் குரங்குகள் சேட்டை செய்ய தவறுவது கிடையாது. அதனை நிரூபிக்கும் வகையில் வனத்துறை அதிகாரி சுசந்தா சென் வெளியிட்ட வீடியோவில் குரங்கு ஒன்று சேட்டை செய்துள்ளது. 

சாலையின் ஓரத்தில் மான்களும், குரங்குகளும் கூட்டமாக இருக்கின்றன. அதில் குட்டி மான் ஒன்றின் தோள்மீது குரங்கு தொற்றிக் கொண்டு சவாரி செய்கிறது. மான்குட்டியும் எந்த வித குலுங்கலும் இல்லாமம் குரங்கை சுமந்து கொண்டு செல்கிறது. மிருக பாஷையில் அவை என்ன பேசிக்கொண்ட என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியவில்லை. 

31 வினாடிகள் ஓடும் இந்த வீடியோ படு க்யூட்டாக அமைந்துள்ளது. இதனை நெட்டிசன்கள் ரசித்து கமென்ட் செய்து வருகின்றனர்.
 

வீடியோவை பார்க்க... 

பதிவிட்ட குறுகிய நேரத்தில் இந்த வீடியோ 28 ஆயிரத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. 2,600-க்கும் அதிகமானோர் இந்த வீடியோவை விரும்பியுள்ளனர். 
 

நேஷ்னல் ஜியோகிராபிக் சேனல் அளித்திருக்கும் தகவல்படி, குரங்குகளும், மான்களும் நல்ல நண்பர்களாக இருப்பார்களாம். ஜப்பானில் மகாகஸ் என்ற குரங்கு வகையும், சிகா மான்களும் யகுஷிமா தீவில் ஒன்றாக சுற்றித்திரியுமாம். அங்கு மானின் மீது குரங்குகள் சவாரி செய்வதை அதிகம் காண முடியும் என உயிரியல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். 

Click for more trending news


.