‘சென்னை- சேலம் சாலைக்கு சட்டப்படியே நடவடிக்கை’ - சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

சேலம் - சென்னைக்கு இடையில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
‘சென்னை- சேலம் சாலைக்கு சட்டப்படியே நடவடிக்கை’ - சுற்றுச்சூழல் அமைச்சகம் தகவல்

சேலம் - சென்னைக்கு இடையில் 277 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 வழிச்சாலை திட்டம் அமல்படுத்தப்படப் போகிறது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் சுற்றுச்சூழல் அமைச்சகம் சார்பில், ‘சட்டப்படியே நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘சென்னை - சேலம் மாவட்டங்களுக்கு இடையில் போடப்பட உள்ள பசுமை வழிச்சாலை திட்டத்துக்கு இதுவரை, சமூக தாக்க மதிப்பீடு செய்யவில்லை. சட்ட விதிகளை மீறி நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே இந்தத் திட்டத்துக்கு தடை போட வேண்டும்’ எனக் கோரி பலதரப்பட்ட தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று இந்த வழக்கு டி.எஸ்.சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் ஆகிய நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் அமர்வுக்குக் கீழ் விசாரணைக்கு வந்தது. அப்போது சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஜி.ராஜகோபலன், ‘தற்போது திட்டத்துக்காக கையகப்படுத்தப் போகும் நிலத்தை சர்வே எடுக்கும் பணிகள் மட்டும் தான் நடந்து வருகிறது. சுறுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து அனுமதி பெற இந்த சர்வே நடவடிக்கை முக்கியமானது. அரசு, சட்டத்தை மதிக்காது என்ற யூகத்தின் பேரில் திட்டத்துக்கு எதிராக வழக்கு போடக் கூடாது’ என்று வாதாடினார்.

இதையடுத்து இன்று மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று தெரிவித்தனர் நீதிபதிகள்.(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)


சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................