This Article is From Oct 03, 2019

Lalithaa Jewellery-யில் கொள்ளை; ‘என்ன செய்கிறது போலீஸ்..?’- Owner கிரண் குமார் கருத்து!

Lalithaa Jewellery theft - ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர்.

Lalithaa Jewellery-யில் கொள்ளை; ‘என்ன செய்கிறது போலீஸ்..?’- Owner கிரண் குமார் கருத்து!

Lalithaa Jewellery theft - திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். 

திருச்சியில் (Tiruchy) உள்ள லலிதா ஜுவல்லரி (Lalithaa Jewellery) ஷோரூமில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்துச் (Theft) சென்றுள்ளனர். சம்பவத்தின் போது கொள்ளையர்கள் புலி மற்றும் காளை போன்ற முகமூடிகளை (Masks) அணிந்து திருடியுள்ளனர். 

செவ்வாய்கிழமை இரவு முகமூடி கொள்ளையர்கள் லலிதா ஜூவல்லாரி ஷோரூமின் ஒருபக்க சுவரை துளையிட்டு 30 கிலோ எடையுள்ள சுமார் 800 நகைகளை திருடிச் சென்றதாக காவல்துறை தெரிவித்துள்ளது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 13 கோடி ரூபாயாகும். 

ஷோரூமுக்கு 6 இரவு நேரக் காவாளிகள் இருந்தபோதிலும் கொள்ளையர்கள் துணிகர சம்பவத்தில் ஈடுபட்டனர். கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் கடைக்குள் அவர்கள் கழித்ததாகக் கூறப்படுகிறது.

இது குறித்து லலிதா ஜுவல்லரியின் உரிமையாளர் கிரண் குமார், “சம்பவம் நடந்தது தொடர்பாக முதல் தகவல் அறிக்கையான எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 கோடி ரூபாய் அளவுக்குப் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. காவலர்கள் நகைகள் எப்படி கொள்ளயடிக்கப்பட்டுள்ளது மற்றும் அதன் எடை என்ன என்பது குறித்தெல்லாம் விரிவாக ஆராய்ந்துள்ளனர். 

தங்க செயின்கள், வைரம் மற்றும் பிளாட்டினம் நகைகள் திருடப்பட்டுள்ளன. அதன் மொத்த மதிப்பும் தோராயமாக 13 கோடி ரூபாய் இருக்கும். இந்த மொத்த விவகாரத்தில் காவல் துறையினர் மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். கொள்ளையடித்தவர்களை வளைத்துப் பிடிக்க உடனடியாக செயல்படத் தொடங்கியுள்ளனர்” என்று விரிவாக கூறினார். 

.