This Article is From Jun 17, 2020

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

எல்லை மோதல் குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

சீனாவுடனான எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு

வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது.

ஹைலைட்ஸ்

  • லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் இந்திய ராணுவம் கடும் மோதல்
  • இந்தியா தரப்பில் 20 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்
  • எல்லை மோதல் குறித்து மோடி அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றன
New Delhi:

லடாக் எல்லையில் சீனாவுடன் ஏற்பட்டிருக்கும் மோதல் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த  கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் சீன ராணுவத்துடன் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் உயிரிழ்ந்துள்ளதா ஏ.என்.ஐ.செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
 

.

நேற்று முன்தினம் இரவு  தொடங்கிய மோதலில் இந்தியா - சீனா என இரு நாட்டு படைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது.  சீனா தரப்பில் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 43 ஆக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும் ராணுவ கர்னல்  சந்தோஷ் பாபபு, ஹவில்தாரான தமிழகத்தை சேர்ந்த பழனி மற்றும் சிப்பாய் ஓஜா ஆகிய 3 பேர் வீர மரணம் அடைந்திருப்பது மட்டு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஜீரோ டிகிரி மற்றும் அதற்கு குறைவான வெப்பநிலை கொண்ட பகுதியில் நடைபெற்ற இந்தத சண்டையின்போது துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தப்படவில்லை என்றும் கற்கள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் சீன ராணுவம் தாக்குதல் நடத்தியதாகவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவத்தை தொடர்ந்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய ராணுவம், எல்லைகளை பாதுகாப்பதில் உறுதி யோடு செயல்பட்டு வருவதாக கூறியுள்ளது. 

இருதரப்பு மோதலை தொடர்ந்து தற்போது இரு நாட்டு படைகளும் பரஸ்பரம் விலகிச் சென்று விட்டதாக ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் சீனா உடனான மோதல் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்திற்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். எல்லை மோதல் குறித்து மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார் பிரதமர் மோடி.

.