கும்பமேளாவில் புனித நீராடிய 'பெரிய தலைகள்'!

உத்திர பிரதேசம் முதலமைச்சரான யோகி அதியனாத், மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி, சமஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

கும்பமேளாவில் புனித நீராடிய 'பெரிய தலைகள்'!

தன் காமினட் அமைச்சர்களுடன் யோகி அதியனாத் புனித நீராடினார்.

பிரயகராஜில் கும்பமேளா நடைப்பெற்று வருகிறது. 12 வருடங்களில் இரண்டு முறை மட்டுமே நடைபெறும் இந்த கும்பமேளாவில் 12 கோடி பேர் பங்கேற்பார்கள் என தெரிகிறது.

கும்பமேளாவில் புனித நீராடுவது வழக்கம். கங்கை, யமுனை மற்றும் புராண கதைகளில் வரும் சரஸ்வதி நதிகள் இணையும் இடத்தில் புனித நீராடுவார்கள்.

இது வரும் மகா சிவராத்திரியான மார்ச் 4 வரை நடைபெறும். இதுவரை இந்த கும்பமேளாவில் பல அமைச்சர்கள், மந்திரிகள், முதலமைச்சர்கள் என பலர் புனித நீராடினர். சிலர் அதனை தங்களது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளனர்.

உத்திர பிரதேசம் முதலமைச்சரான யோகி அதியனாத், மத்திய மந்திரி ஸ்மிரிதி இராணி, சமஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் ஆகியோர் இதில் முக்கியமானவர்கள்.

கடந்த செவ்வாய்கிழமை அன்று, தன் காமினட் அமைச்சர்களுடன் யோகி அதியனாத் புனித நீராடினார்.

 

 

ஜனவரி 15 ஆம் தேதி ஸ்மிரிதி இராணி புனித நீராடினார். பின் அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்தார்.

 

 

கடந்த ஞாயிறு அன்று சமஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் புனித நீராடினார்

 

 

வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி, பிரியங்கா காந்தி புனித நீராடிய பின் காங்கிரஸ் கட்சியில் பதவி ஏற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Click for more trending news