This Article is From Jun 17, 2019

கொல்கத்தாவில் ஆற்றில் மேஜிக் செய்த நபர் நீரில் மூழ்கினார்

4 நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் கிடைக்காததால் காவல்துறை மேஜிக் மேன் நீரில் மூழ்கி விட்டதாக அறிவித்தனர்.

கொல்கத்தாவில் ஆற்றில் மேஜிக் செய்த நபர் நீரில் மூழ்கினார்

ஹெளரா பாலத்தின் 29 வது தூணில் அருகில் காணாமல் போய் விட்டார்.

Kolkata:

கொல்கத்தாவில் மேஜிக் செய்ய முயன்ற நபர் கங்கையில் மூழ்கி விட்டதாக காவல்துறை அறிவித்துள்ளது. சான்சால் லாகிரி என்ற 40 வயதான மேஜிசியன் ஹாரி ஹவுடினி தந்திரங்களை செய்ய முயல்வதாக அறிவித்து செய்தார். கை கால்களை கட்டிக் கொண்டு மில்லேனியம் பூங்காவிலிருந்த ஆற்றின் உள்ளே மெதுவாக இறக்கினார்கள். மக்களின் முன் சாகசத்தை தொடங்கியவர் ஹெளரா பாலத்தின் 29 வது தூணில் அருகில் காணாமல் போய் விட்டார். 

நீரில் மூழ்கியவர் வெளியில் வராததையடுத்து 10 நிமிடங்களில் காவல்துறைக்கு மக்கள் தகவல் அளித்தனர்.  காவல்துறையும் பேரிடர் மேலாண்மை குழுவும் இணைந்து தேடியுள்ளனர். இரவானதும் தேடுதல் பணியை மேற்கொள்ள முடியவில்லை. மேஜிக் செய்த நபர் ஆபத்தான இந்த வித்தையை எந்தவித பாதுகாப்பு ஏற்பாடும் செய்யாமல் செய்த்தாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. 

மேஜிக் செய்பவர் கைகள் மற்றும் காலையும் கட்டியபடி கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டார். அவரே தன் கட்டுகளை நீக்கி பெட்டியிலிருந்து வெளியே வருவதாக இருந்தது. ஆனால் மேஜிக் மேன் வெளியே வரவே இல்லை.  4 நீச்சல் வீரர்கள் ஆற்றில் இறங்கி தேடியும் கிடைக்காததால் காவல்துறை  மேஜிக் மேன் நீரில் மூழ்கி விட்டதாக அறிவித்தனர்.  ஆற்றில் மேஜிக் செய்ய யார் அனுமதித்தது என்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.

.