மகர சங்கராந்தி விழா: அமோக விற்பனையில் ராகுல், மோடி படம் கொண்ட பட்டங்கள்! (படம்)

பிரதமர் நரேந்திர மோடியின் படங்களே பரவலான பட்டங்களில் காணப்படுகிறது

 Share
EMAIL
PRINT
COMMENTS
மகர சங்கராந்தி விழா: அமோக விற்பனையில் ராகுல், மோடி படம் கொண்ட பட்டங்கள்! (படம்)

குஜராத்தில் பிரதமர் மோடி மற்றும் ராகுலின் புகைப்படங்கள் கொண்ட பட்டங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.


Rajkot: 

தேர்தல் வருடமான இந்த வருடத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கும் ராகுல் காந்திக்கும் பயங்கர அரசியல் போர் நிலவி வருகிறது. இவர்களிடையேயான போர் களத்தில் மட்டுமல்லாமல், ஆகாயத்திலும் நீடித்து வருகிறது. 

மகர சங்கராந்தியை முன்னிட்டு குஜராத்தில் பட்டம் விடும் திருவிழா நடந்து வருகிறது. இதில், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகைப்படங்கள் கொண்ட பட்டங்கள் பரவலாக விற்பனையாகி வருகின்றன. 

 

8jmj5mqk

 

ஒவ்வொரு வருடமும், புது விதமான பட்டங்கள் விற்பனைக்கு வருவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடம், தேர்தலை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் புகைப்படங்கள் கொண்ட பட்டங்கள் சந்தையில் அறிமுகமாகி உள்ளன. 

 
ldv0n4v8

 

இதுகுறித்து பட்டங்கள் விற்பனை செய்யும் தினேஷ் என்பவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறியதாவது, இந்த வருடம் மோடி புகைப்படங்கள் கொண்ட பட்டங்களே மிகவும் பிரபலமாக உள்ளது. அரசியல் தலைவர்கள் புகைப்படங்களை தவிர்த்து, பாகுபலி நடிகர்கள், ஒற்றுமைக்கான சிலை படங்கள் கொண்ட பட்டங்களே பரவலாக காணப்படுகிறது என்றார்.

 

8kmg8rvo

சர்வதேச பட்டம் விடும் திருவிழா, வரும் மகர சங்கராந்தி ஜனவரி 14 வரை நடைபெறும்.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................