தன்னையை ‘மீம்ஸ்’ மூலம் கலாய்த்துக் கொள்ளும் கெவின் பீட்டர்சன்!

புல் ஷாட் விளையாட முயற்சி செய்த பீட்டர்சன், அதை சரிவர விளையாடாமல் நிலை தடுமாறியுள்ளார்.

 Share
EMAIL
PRINT
COMMENTS
தன்னையை ‘மீம்ஸ்’ மூலம் கலாய்த்துக் கொள்ளும் கெவின் பீட்டர்சன்!

சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடிய போது பல முன்னணி பவுலர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் பீட்டர்சன்.


இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கெவின் பீட்டர்சன். சர்வதேச கிரிக்கெட் அரங்கில் விளையாடிய போது பல முன்னணி பவுலர்களுக்குத் தலைவலியாக இருந்தவர் பீட்டர்சன். தற்போது அவருக்குத் தலைவலியாக மாறியுள்ளன சில மீம்ஸ்கள். இது அவரைப் பற்றிய மீம்ஸ்கள்..!

உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பீட்டர்சன், விளையாடிய போது ஒரு படம் எடுக்கப்பட்டுள்ளது. புல் ஷாட் விளையாட முயற்சி செய்த பீட்டர்சன், அதை சரிவர விளையாடாமல் நிலை தடுமாறியுள்ளார். அந்த நேரத்தில் எடுத்த புகைப்படம் என்பதால், அதில் அஷ்ட கோணத்தில் இருக்கிறார் கே.பி.
 

மீம்ஸை கீழே பார்க்கவும்:

Oh no!!!!!!!! ????????‍♂️

A post shared by Kevin Pietersen (@kp24) on

அந்தப் படத்தை மையமாக வைத்து பல மீம்ஸ்களை, இணையத்தில் பறக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள். இது தன் பார்வைக்கு வர, பீட்டர்சனும் அதை ரசித்துள்ளார். அத்தோடு நிற்காமல், போட்டோஷாப் செய்யப்பட்ட அந்த மீம்ஸ்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். 

கே.பி பகிர்ந்த மேலும் சில மீம்ஸ்கள்:

This Is The Last One!

A post shared by Kevin Pietersen (@kp24) on

பின்னர், மீம்ஸ் உருவாகக் காரணமாக இருந்த உண்மையான புகைப்படத்தையும் பகிர்ந்து, “இந்த போட்டோ தலைப்புச் செய்தியாக மாறப் போகிறது. அப்படி ஆக வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அப்படி ஆகும் என்றும், எல்லோரும் இதைப் பற்றி பேசுவார்கள் என்றும் நினைக்கிறேன். இதுதான் எனது கிரிக்கெட் வாழ்க்கையின் சுருக்கக் கதை” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளார். 

Click for more trending news
சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................