'மத்திய அரசின் விதிமுறைகளைப் பொறுத்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்' - கேரள அரசு

அனைத்து சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளரங்கில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம். வெளியே நடத்த அனுமதியில்லை. 

'மத்திய அரசின் விதிமுறைகளைப் பொறுத்து வழிபாட்டு தலங்கள் திறக்கப்படும்' - கேரள அரசு

விமான இருக்கைகள் முழுவதுமாக நிரம்பும்போது பேருந்து சீட்டுகள் நிரம்பக்கூடாதா?  என்று பினராயி கேள்வி எழுப்பியுள்ளார்.

Thiruvananthapuram:

ஜூன் 8-ம் தேதி முதல் வழிபாட்டுத் தலங்களை திறந்துகொள்ளலாம் என மத்திய அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், மத்திய அரசு வெளியிடும் விதிமுறைகளைப் பொறுத்து வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என்று கேரள அரசு அறிவித்துள்ளது. 

பொது முடக்க தளர்வுகள் குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறியதாவது-

வழிபாட்டுத் தலங்களை ஜூன் 8-ம்தேதி திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு தரப்பிலிருந்து விதிமுறைகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையில் வழிபாட்டுத் தலங்களை கேரள அரசு திறக்கும்.

குருவாயூர் கோயில் நடைபெறுவது உள்பட அனைத்து திருமண நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க அனுமதி கிடையாது. 

ஜூலைக்கு பின்னர்தான் பள்ளிகள் திறக்கப்படும். இதுதொடர்பாக தக்க சமயத்தில் முடிவு அறிவிக்கப்படும். 

கேரளாவுக்குள் பேருந்துகள் இயங்க எந்த தடையும் கிடையாது. பயணிகள் எண்ணிக்கையிலும் கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை. ஆனால் பயணிகள் மாஸ்க் மற்றும் சானிட்டைசர்களை கட்டாயம் பயன்படுத்தப்பட வேண்டும். பேருந்துகள் அண்டை மாவட்டங்களுக்குள் செல்லலாம். ஒட்டுமொத்தமாக கேரளாவின் அனைத்து பகுதிகளுக்கும் செல்ல முடியாது. 

விமான இருக்கைகள் முழுவதுமாக நிரம்பும்போது பேருந்து சீட்டுகள் நிரம்பக்கூடாதா? 

அனைத்து சினிமா படப்பிடிப்புகளுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் அதிகபட்சம் 50 பேர் மட்டுமே இருக்க வேண்டும். உள்ளரங்கில் படப்பிடிப்பு நடத்திக் கொள்ளலாம். வெளியே நடத்த அனுமதியில்லை. 

இவ்வாறு அவர் தெரிவித்தார்.