This Article is From Mar 14, 2020

கேரளாவில் கொரோனா சோதனையிலிருந்து தப்பிச்சென்ற அமெரிக்கத் தம்பதி!

Coronavirus: அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி, கேரளாவின் ஆழாப்புழா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சென்றுள்ளனர்.

கொரோனா சோதனையில் இருந்து தப்பிச்சென்ற அமெரிக்க தம்பதி!

ஹைலைட்ஸ்

  • கொரோனா சோதனையில் இருந்து தப்பிச்சென்ற அமெரிக்க தம்பதி!
  • அவர்கள் மருத்துவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சென்றுள்ளனர்.
  • இத்தாலியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி
New Delhi:

கேரளாவில் கொரோனா வைரஸ் அறிகுறி உள்ள அமெரிக்கத் தம்பதி மருத்துவமனையிலிருந்து தப்பிச்சென்ற நிலையில், தீவிர தேடுதலுக்குப் பின்னர் விமான நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இதுதொடர்பாக ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் என்டிடிவிக்கு அளித்த தகவலில், அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி, கேரளாவின் ஆழாப்புழா மருத்துவமனையிலிருந்து மருத்துவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் சென்றுள்ளனர். அவர்களுக்கு வைரஸ் அறிகுறிகள் இருந்ததைத் தொடர்ந்து, கொரோனா சோதனைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இதைத்தொடர்ந்து, அவர்கள் மருத்துவமனையில் இருந்து சென்றதால், அவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் இருந்தது. இந்நிலையில், நேற்றிரவு கொச்சி விமான நிலையத்தில், அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றார். 

கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் இத்தாலியைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கேரளாவில் மொத்தம் 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலே அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கேரளாவிலே உள்ளது. 

தொடர்ந்து, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அந்த இத்தாலியச் சுற்றுலாப் பயணி அங்கேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இதேபோல், லண்டனிலிருந்து திரும்பி வந்த ஒருவர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் என முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். 

இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, ஆலப்புழா மாவட்ட நிர்வாகம் தேதி, நேரம், இடம் உள்ளிட்ட விவரங்களுடன் அவர்கள் குறித்த விரிவான தகவல்களை வெளியிட்டது. இதன்மூலம் மக்கள் அவர்களைக் கண்டுபிடிக்க உதவுவார்கள் என்ற காரணத்திற்காக இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

rte8im0g

இதுதொடர்பாக எதிர்க்கட்சி எம்எல்ஏவான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் எம்எல்ஏ சபரிநாதன் கூறும்போது, இத்தாலியிலிருந்து கேரளா திரும்பிய ஒருவர் விமான நிலைய அதிகாரிகளிடம் தகவல் கூறியதாகவும், பின்னர் மருத்துவக் கல்லூரிக்குச் சோதனைக்காகச் சென்றுள்ளார்.

மருத்துவக் கல்லூரியில், சோதனைக்குப் பிறகு, அவர் மீண்டும் ஒரு ஆட்டோவில் வந்து, குளிர்பானம் வாங்குவதற்காக ஒரு கடையில் நிறுத்தியுள்ளார், தொடர்ந்து, ஆட்டோவுக்கு எரிபொருளுக்கு நிரப்ப பெட்ரோல் பங்கிலும் நின்றுள்ளனர்.

 

s6qsanfg

தற்போது, சோதனை முடிவில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், இவையெல்லாம் மோசமான குறைபாடுகளே. 

கடந்த மாதம் மாநிலத்தில் கொரோனா உறுதிசெய்யப்பட்ட முதல் மூன்று நபர்களும், தற்போது குணப்படுத்தப்பட்டு மருத்துவமனைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். மாநிலத்தின் பல்வேறு மருத்துவமனைகளில் குறைந்தது 270 பேர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளிலும், 4,000க்கும் மேற்பட்டோர் கண்காணிப்பிலும் உள்ளனர், அவர்களில் 3,910 பேர் வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ளனர்.

.