திருடிய தங்க நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பியளித்த கேரளா திருடன்

தங்க நகைகளை திருப்பி அளித்ததால் அவர் மீது எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை

திருடிய தங்க நகைகளை மன்னிப்பு கடிதத்துடன் திருப்பியளித்த கேரளா திருடன்

கேரளாவின் அம்பாலாபுழாவில் நடைபெற்ற இந்த சம்பவத்தில், திருடன் ஒருவன் வீட்டில் திருடிய தங்க நகைகளை இரு தினங்களுக்கு பிறகு மன்னிப்பு கடிதத்துடன் திருப்பியளித்துள்ளான். செவ்வாயன்று தக்காழி பஞ்சாயத்தில் உள்ள அந்த வீட்டில், உறவினரின் திருமனத்திற்கு குடும்பத்தினர் அனைவரும் சென்றிருந்தபோது திருடன் உள்ளே நுழைந்திருக்கிறான்.

அந்த திருடன் பின்புற கதவை உடைத்து அலமாரியில் இருந்த ஒரு மோதிரம், காதணி மற்றும் அலங்கார பேழை போன்ற விலையுயர்ந்த பொருட்களை எடுத்துச் சென்று விட்டான்.

குடும்பத்தினர் திரும்பி வந்த போது, வீடு கொள்ளை அடிக்கப்பட்டிருப்பதை உணர்ந்து போலிஸிடம் தகவல் தெரிவித்தனர்.

எனினும், அதற்குள்ளாக தன்னுடைய தவறை உணர்ந்து மனம் மாறிய திருடன் நகைகளை அதன் உரிமையாளரிடம் ஒரு மன்னிப்பு கடிதத்துடன் திருப்பியளித்தான்.

Newsbeep

”என்னை கைது செய்ய வைத்துவிடாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். நான் செய்த தவறு என்னுடைய தீவிர நிலைமைகளினால் தான்,” என அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருக்கான்.

திருடன் தங்க நகைகளை திருப்பி அளித்துவிட்டதால் எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.

Click for more trending news