கேரளாவில் கொடூரம்: திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண்ணை எரித்து கொன்ற இளைஞர்!

இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரும் தீ காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இன்று காலை அந்த பெண் எரித்து கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Thiruvananthapuram:

கேரளாவில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த பெண்ணை இளைஞர் ஒருவர் எரித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரும் தீ காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். 

மீதுன் (20) என்ற அந்த இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அந்த பெண்ணிடம் பலமுறை வற்புறுத்தி வந்துள்ளார். எனினும், இதற்கு அந்த பெண்ணின் பெற்றோர் அவரது வயதை காரணம் காட்டி மறுப்பு தெரிவித்து வந்துள்ளனர். 

எனினும், மீதுன் தொடர்ந்து அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அழுத்தம் கொடுத்து வந்துள்ளார். இதனால், ஒரு கட்டத்தில் அவர்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். பின்னர் காவல் நிலையத்தில் மீதுன், இனி அந்த பெண்ணை பின் தொடர மாட்டேன், திருணம் செய்து கொள்ளும் படி வற்புறுத்த மாட்டேன் என்று உறுதி அளித்துள்ளார். 

இந்நிலையில், இன்று காலை அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்ற மீதுனை, அவரது தந்தை தடுத்து நிறுத்தியுள்ளார். அப்போது, வெளியே வந்த அந்த பெண் மீது எளிதில் பற்றிக்கொள்ளும் ஏதோ திரவத்தை ஊற்றிய அவர், தீ வைத்து எரித்துள்ளார். இதில், அந்த பெண்ணை மீட்க போராடிய அவரது தந்தையும் தீ காயமடைந்தார். 

இதைத்தொடர்ந்து, எர்ணாக்குளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு படுகாயமடைந்த அந்த பெண்ணும், மீதுனும் கொண்டு செல்லப்பட்டனர். எனினும், செல்லும் வழியிலே இருவரும் உயிரிழந்தனர்.