கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!

Nipah virus: உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி மொத்தம் 18 பேருக்கு கடந்த ஆண்டு நிபா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இவர்களில் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

கேரளாவில் சிகிச்சை பெற்று வரும் இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி!

23 வயது இளைஞருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.

New Delhi:

நிபா வைரஸ் அறிகுறியுடன் கேரள இளைஞர் (23) ஒருவர் எர்ணாக்குளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, தேசிய வைராலஜி மையம் அவரது ரத்த மாதிரி பரிசோதனை செய்தது. அதன், முடிவில் அந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிபா வைரஸ் தாக்குதலுக்கு கடந்த வருடம் மட்டும் 17 பேர் உயிரிழந்தனர். எனினும், பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

அந்த இளைஞருடன் இருந்த இரண்டு பேருக்கும், மேலும் இரண்டு செவிலியர்களுக்கும் காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதேபோல், 52 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் மாணவர்கள் ஆவார்கள்.

அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் எடுக்கப்பட்டு வருகிறது. அதனால், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

நிபா வைரஸானது, விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவுவதாகும், இதன் பாதிப்பு ஏற்பட்ட தொடக்கத்தில், காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். இந்த வைரஸ்க்கு எதிராக எந்த மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை.

பாதிப்பு அறிகுறி உள்ளதாக தீவிர கண்காணிப்பில் உள்ள 52 பேரில் 11 பேர் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட மாணவருடன் திரிசூர் பயணம் செய்துள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், செவிலியர்களுக்கு பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளதாகவம் கேரள சுகாதாரத்துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார நிறுவனம் அளித்துள்ள தகவலின்படி கடந்த ஆண்டு மொத்தம் 18 பேருக்கு நிபா வைரஸ் பாதிப்பு இருந்தது. அவர்களில் 17 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

கடந்த 2018 மே.19ல் நிபா வைரஸ் பாதிப்பால் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது. கேரளாவுக்கு முன்பு, கடந்த 2004ல் பங்களாதேஷில் இதன் பாதிப்பு இருந்தது.