பட்டாசுகள் மறைத்து வைக்கப்பட்ட அன்னாசிப் பழத்தை உண்ட யானை பரிதாப மரணம்!

இறப்பதற்கு முன்னதாகதான் மே25 அன்றுதான் வன துறை அதிகாரிகள் யானை குறித்த தகவல்களை அறிந்தனர். யானை வள்ளியாறு ஆற்றில் இறங்கி தண்ணீர் நீண்ட நேரம் நின்றிருந்தது. வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் வந்து யானையை மீட்க போராடினர். ஆனால், யானை தண்ணீரிலிருந்து வெளியேற மறுத்து மே 27 மாலை 4 மணிக்கு உயிரிழந்தது.

அன்னாசிப் பழத்தில் வைக்கப்பட்ட பட்டாசு வெடித்ததில் யானை பலத்த காயமடைந்தது.

Thiruvananthapuram:

கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் கர்ப்பிணி யானை ஒன்று ஆற்றில் நின்றவாறு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. தனியாக ஊருக்குள் சுற்றித்திரிந்த இந்த யானைக்கு மக்கள் சிலர் அன்னாசிப் பழத்தில் பட்டாசு வைத்து கொடுத்துள்ளனர். அதை உண்ட யானை பலத்த காயமடைந்து ஆற்றில் தண்ணீரில் இறங்கி நின்றுள்ளது. பின்னர் கும்கி யானைகள் உதவியுடன் பெண் யானையை மீட்க போராடிய வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்ததையடுத்து யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த நிகழ்வையொட்டி இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இந்த சம்பவத்தினை வனத்துறை ஊழியர் ஒருவர் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்ததையடுத்து காவல் துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். பல சமூக ஆர்வலர்கள் இதில் சம்பந்தப்பட்டவர்களை மீது கடும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கோரியுள்ளனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் மாத இறுதி அல்லது மே மாத தொடக்கத்தில் நடைபெற்று இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் 20 நாட்களுக்கு முன்னர் நடைபெற்று இருக்கலாம் என தான் சந்தேகிப்பதாக வனத்துறை அதிகாரி ஆஷிக் அலி யு என்டிடிவிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

vmu8gf2

நேற்று வெளியான பிரேசதப் பரிசோதனை அறிக்கையில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன.

பொதுவாக உள்ளூரில் தயாரிக்கப்படும் பட்டாசுகளை நிரப்பிய அன்னாசிப்  பழங்கள் காட்டுப்பன்றியை விரட்டுவதற்காக வயலில் பயன்படுத்துவார்கள். உணவு தேடி ஊருக்குள் நுழைந்த யானை அதில் ஒரு பழத்தினை சாப்பிட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுகிறது.

அன்னாசிப் பழம் யானையின் வாயில் வெடித்ததையடுத்து யானையின் உடல் நலம் பெரியதாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் யானை பல நாட்களாக ஊருக்குள் சுற்றித் திரிந்தது. பட்டாசு வெடித்ததில் யானையின் நாக்கு மற்றும் வாயின் உட்புறங்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக எவ்வித உணவையும் யானையால் எடுத்துக்கொள்ள முடியவில்லை. மீண்டும் வன பகுதிக்குள்ளும் செல்ல முடியாமல் தவித்து வந்தது.

qr1u8ki

தன்னுடைய வாயில் ஏற்பட்ட காயத்தை சரி செய்துகொள்ளவோ அல்லது, ஈக்கள் மற்ற பூச்சுகள் தீண்டுவதை  தவிர்க்கவோ யானை நீரில் நின்றிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் யானை இறப்பதற்கு முன்னதாக மே25 அன்றுதான் வன துறை அதிகாரிகள் யானை குறித்த தகவல்களை அறிந்தனர். யானை வள்ளியாறு ஆற்றில் இறங்கி தண்ணீரில் நீண்ட நேரம் நின்றிருந்தது. வனத்துறையினர் கும்கி யானை உதவியுடன் வந்து யானையை மீட்க போராடினர். ஆனால், யானை தண்ணீரிலிருந்து வெளியேற மறுத்து மே 27 மாலை 4 மணிக்கு உயிரிழந்தது. பின்னர் அதன் உடலை மீட்டு வன பகுதிக்குள் கொண்டு சென்று அடக்கம் செய்யப்பட்டது.