'என் கிட்ட குண்டு இருக்கா?' எனக் கேட்ட விமானப் பயணி போலீஸிடம் ஒப்படைப்பு!

செவ்வாய் அன்று இரவு 7.30 மணி அளவில் இந்த சம்பவம் நடந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது

 Share
EMAIL
PRINT
COMMENTS
'என் கிட்ட குண்டு இருக்கா?' எனக் கேட்ட விமானப் பயணி போலீஸிடம் ஒப்படைப்பு!

சென்னை விமான நிலையத்தில் இது நடந்தது (File Photo)


Chennai: 

கொச்சியில் இருந்து புவனேஷ்வர் சென்ற இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் சர்ச்சைக்குரியவாறு பேசியதால், அந்தப் பயணி சென்னை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்.

இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்ற நிலை நிலவி வருவதால், விமான நிலையங்களுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இண்டிகோ விமானத்தில் பயணித்த கேரளாவைச் சேர்ந்த அலெக்ஸ் மாத்யூ என்பவர், ‘என்னுடைய பையில் குண்டு வைத்துள்ளேனா?' எனக் கேட்டுள்ளார். இதனால், அவர் சென்னை விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார்.

இந்த சம்பவம் செவ்வாய் அன்று இரவு 7.30 மணி அளவில் நடந்ததாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது. எஸ்எல்பிசி சோதனை செய்யும் போதுதான் அலெக்ஸ் இவ்வாறு கேட்டுள்ளார்.

இதனால் பதற்றமடைந்த பாதுகாப்பு ஊழியர்கள், அந்தப் பயணியின் பையை கடுமையாக சோதனை செய்துள்ளனர். சந்தேகப்படும் விதமாக எதுவும் கிடைக்கவில்லை என்றாலும், அலெக்ஸ் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார். அவரிடம் போலிஸ் மேலும் விசாரித்து வருகின்றனர்.

 சமீபத்திய தமிழ்நாட்டுச் செய்திகள் சென்னை செய்திகள், அரசியல், வர்த்தகம், தொழில்நுட்பம், கிரிக்கெட் ஆகியவற்றின் தலைப்புச் செய்திகள் என ஒவ்வொரு நிகழ்வுகளையும் பற்றி தமிழில் படிக்க Facebook மற்றும் ட்விட்டர் Twitter ஐ பின் தொடருங்கள்.

NDTV Beeps - your daily newsletter

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................